2024 நாடாளுமன்ற தேர்தலின்போது, கூட்டணியின்றி புலம்பிக் கொண்டிருந்த அதிமுகவிற்கு, பெரும் நம்பிக்கையாக இருந்தது தேமுதிக என்று சொன்னால் அது மிகையாது. அதிமுக பக்கம் யாருமே வரமாட்டார்கள் என்று விமர்சனங்கள் எழுந்த நிலையில், தேமுதிக கொடுத்த பூஸ்ட் தான் எடப்பாடிக்கு எனர்ஜி டானிக்காக மாறியது. ஆனால் தேமுதிக ஏதோ ஒரு காரணத்தோடு தான் கூட்டணிக்கு வந்திருக்கிறது என்று யூகித்த அதிமுக தலைமையிடம், ராஜ்யசபா சீட் வேண்டும் என்று கோயம்பேடு அண்ணியார் கேட்க, வேறு வழி இல்லாமல் எடப்பாடியார் ஒப்புக் கொண்டதாகக் கூறப்பட்டது.
தேர்தல் முடிந்தது.... அதிமுக கூட்டணி தோல்வியை தழுவியது... ஆனால், அண்ணியார் மட்டும் ராஜ்யசபா சீட்டை விட்டப்பாடு இல்லை. எம்.பி சீட் வரும்.... ஆனா வராது என்று எம்.ஜி.ஆர் மாளிகையில் இருந்து தகவல்கள் வெளியாக, அதிரடியாக பிரஸ் மீட்டை கூட்டி “அதிமுக எங்களுக்குத்தான் ராஜ்யசபா சீட் தருவதாக உறுதியளித்துள்ளது. அண்ணன் எடப்பாடியார் சொன்னதை செய்யக் கூடியவர். கொடுத்த வாக்கை தவறாதவர் அண்ணன் எடப்பாடியார்” என்று ஓவர் பில்டப்போடு முந்திக் கொண்டு மீண்டும் அறிவித்தார் கோயம்பேடு அண்ணியார். காரணம், இலையானது மாம்பழத்தின் வெயிட்டை தாங்காது என்பதற்காக முந்திக் கொண்டு முழங்கியது முரசு என்று கூறினர் விவரம் அறிந்தவர்கள்.
இத்தகையச் சூழலில், தற்போது மாம்பழமே நசுங்கும் நிலையில் உள்ளதால், தாமரையோடு நீந்த தயாரானது இலைக்கட்சி. அதன்படி, அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் மலர்ந்த நிலையில், முரசுக் கட்சிக்கு தகவலே தெரிவிக்கவில்லை என்கின்றன கோயம்பேடு வட்டாரங்கள்.
இந்த நிலையில், அதிமுக – பாஜக கூட்டணி உருவானது குறித்து பேசியுள்ள பிரேமலதா, அதிமுக பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டது என்பதை தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்துக் கொண்டதாகவும், அது அந்த இரண்டு கட்சியும் சேர்ந்து எடுத்த முடிவு என்பதால் அதை பற்றி இப்போதைக்கு ஏதும் சொல்ல முடியாது எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், அதிமுகவுடன் தேமுதிக கூட்டணியில் தொடர்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்தார். அதற்கு, ”நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவோடு கூட்டணியில் இருந்தோம். தற்போது தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு காலம் இருக்கிறது. எந்த கூட்டணி போகிறோம், யாருடன் கூட்டணி போகிறோம் என்பதை பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை. எங்களிடம் யாரும் கலந்து ஆலோசிக்கவில்லை, நாங்களும் யாருடனும் பேசவில்லை. இப்போதே எதுவும் சொல்லி விட முடியாது” என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
அதிமுகவின் கூட்டணி முடிவு குறித்து கூட்டணிக் கட்சியான தேமுதிகவிற்கே தெரியவில்லை என்று கூறப்படும் நிலையில், தேமுதிகவின் கதி இனி அதோகதி தான் என்ற பேச்சுகள் எழத்தொடங்கின. இதனால் கள நிலவரத்தை சட்டென புரிந்துக்கொண்ட கோயம்பேடு அண்ணியார், ”மூடிய வாசல்கள் முன் நிற்காதே – திறக்கப் போகும் வாசலை நோக்கி நடந்து செல், உனக்கான பாதை புலப்படும்!” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கான அர்த்தம் என்னவோ என முரசுகள் முணுமுணுக்க, இதுதான் சரியான நேரம் என, பிரதமர் மோடியை புகழ்ந்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அப்பதிவில், பிரதமர் மோடி விஜயகாந்தை ‘தமிழகத்தின் சிங்கம்’ என்று அன்பாக அழைப்பதோடு, அவரது உடல்நலக் குறைபாடுகள் போது ஒரு சகோதரரைப் போல கவலைப்பட்டு, அடிக்கடி தொடர்புகொள்வார். அவர்களுடைய நட்பு பரஸ்பர மரியாதையிலும் அன்பிலும் கட்டப்பட்ட, மிகவும் அரிதான ஒன்று” என பதிவிட்டிருக்கிறார் பிரேமலதா விஜயகாந்த். இவ்வளவு நாள் இல்லாமல் தற்போது விஜயகாந்துக்கும் பிரதமருக்கும் இடையேயான நட்பை நினைவுக்கூர்ந்த அண்ணியார், வரும் சட்டமன்றத் தேர்தலில் என்.டி.ஏ கூட்டணியில் இணையும் நோக்கில் தான் பாஜகவுடன் நட்பு பாராட்ட நினைக்கிறாரோ என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர். அதிமுக கூட்டணியில் தானே தேமுதிக இருக்கிறது? அதிமுகவும் என்.டி.ஏ கூட்டணியில் தானே இருக்கிறது? இதில் என்ன புதுசா அண்ணியார் கதை சொல்றாங்க என்று விசாரித்தபோதுதான், ”அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தது ராஜ்யசபா சீட்டுக்காகத்தான்.. ஆனால் அது கிடைக்காது என்பதை அண்ணியார் நன்குணர்ந்ததால், நேரடியாக பாஜகவுடன் கூட்டணி வைத்தால் தேசிய அளவில் ஏதேனும் பதவியை வாங்கிவிடலாமே என்று திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்” என்று கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
அதிமுக மாநில கட்சி, ஆனால் பாஜக அப்படி இல்லை. அது ஒரு தேசிய கட்சி என்பதோடு, மத்தியிலும் ஆட்சியில் இருக்கும் கட்சி என்பதால், தன் மகனுக்காக மத்திய அமைச்சரவையில் இணை அமைச்சர் பதவிக் கூட கேட்டு பெற்றுவிட அண்ணியார் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுவரை பெரிய கூட்டணி இன்றி அரசியல் அனாதையாக கருதப்பட்ட அதிமுகவுக்கு பக்கபலமாக இருந்த தேமுதிகவே தற்போது அரசியல் அனாதையாகி விட்டதாக பேசப்படுகிறது. இந்நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் என்.டி.ஏ கூட்டணியில் தேமுதிக இணையுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்...
- ஜனனி சசிகலா✒️