அரசியல்

முதல்வர் பதிலுரைக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு

அதிமுக ஆட்சிக்காலத்தில் தரைமட்டத்தில் இருந்த தமிழகம், திமுக ஆட்சியில் தலைநிமிர்ந்து நிற்பதாக பேசிய முதலமைச்சரின் பதிலுரைக்கு அதிமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.

 முதல்வர் பதிலுரைக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு
தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கிறது

தமிழக சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட காவல்துறை மீதான மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரை வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின், “அதிமுக ஆட்சிக்காலத்தில் தரைமட்டத்தில் இருந்த தமிழகம் திமுக ஆட்சியில் தலைநிமிர்ந்து நிற்பதை துணிச்சலாக சொல்வதாக கூறினார்.

மேலும் இதுவரை பார்த்தது திராவிட மாடல் அரசின் முதல் பார்ட் எனவும் 2026ஆம் ஆண்டில் 2.0 வெர்சன் வரும் எனவும் பேசினார். முதலமைச்சரின் பதிலுரைக்கு பின் பேசிய எதிர்க்கட்சித்துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார், அரசு தலை நிமிர்ந்து நிற்கிறதா? தலைகுனிந்து நிற்கிறதா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என பேசினார்.

அதிமுக எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு

அதிமுக ஆட்சி ஊர்ந்து சென்றதாக கூறிய முதலமைச்சரின் கருத்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தியதோடு, தமிழகத்தில் பார்ட்2 எப்போதுமே தோல்வி தான் எனவும் இந்தியன்2 கூட தோல்வியடைந்ததாக பேசினார்.

அப்போது பேசிய முதலமைச்சர், ஊர்ந்து என்பதை தவழ்ந்து என மாற்றிக் கொள்ள வேண்டும் என கேட்டதால் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் எழுந்து முழக்கமிட்டனர். தொடர்ந்து பேசிய முதலமைச்சர், தவழ்ந்தோ, ஊர்ந்தோ என்பது Un Parliamentary வார்த்தைகள் அல்ல எனவும், யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை எனவும் பேசினார்.