டெல்லியில் தெரு நாய்களைப் பிடித்து காப்பகங்களில் அடைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், கேரளாவில் இதற்கு நேர்மாறான ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. திருப்புனித்துரா கிராம மக்கள், தாங்கள் 14 வருடங்களாக நேசித்து வந்த ஒரு தெருநாய்க்கு சிலை வைத்து அஞ்சலி செலுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.
14 ஆண்டுகளுக்கு முன் கிராமத்துக்கு வந்த எல்டோ
சுமார் 14 வருடங்களுக்கு முன்பு தெரு நாய் ஒன்று, உடல் முழுவதும் தீக்காயங்களுடனும், நொண்டி நடையுடனும் அந்தக் கிராமத்திற்கு வந்தது. அதன் சோகமான கடந்த காலத்தையும் மீறி, அதன் சாந்தமான குணமும், பாசமான கண்களும் அந்த மக்களின் மனதைக் கவர்ந்தன. மேலும் அந்த தெரு நாய்க்கு ‘எல்டோ’ என பெயர் சூட்டப்பட்டது.
கிராம மக்களின் நண்பன்
இதனைத்தொடர்ந்து, எல்டோவை அப்பகுதி மக்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவனாக ஏற்றுக்கொண்டனர். எல்டோ, பள்ளி செல்லும் குழந்தைகளை வீடுகளுக்கு அழைத்துச் செல்வது, வயதானவர்களுடன் நடப்பது என அனைவருடனும் அது நண்பனாக இருந்துள்ளது. அது ஒருபோதும் மற்ற நாய்களுடன் சண்டையிட்டதில்லை என கிராம மக்கள் தெரிவித்தனர். கிராமத்தில் நடக்கும் திருமணம், பண்டிகை போன்ற எல்லா நிகழ்வுகளிலும் எல்டோ கலந்துகொள்ளுமாம்.
பாசமும், பராமரிப்பும்
எல்டோவின் மீது வைத்திருந்த பாசத்தின் காரணமாக, மக்கள் அதை மிகவும் அக்கறையுடன் கவனித்துக் கொண்டனர். அது சாலை விபத்துகளில் காயமடைந்தபோது, மக்கள் அதை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று உயிரைக் காப்பாற்றினர். சில சமயங்களில் எல்டோ காணாமல் போனால், மக்கள் அனைவரும் உணவுக் அதைத் தேடிச் செல்வார்களாம்.
தெரு நாய்க்கு சிலை
கடந்த ஏப்ரல் மாதம் எல்டோ இறந்தபோது, மக்கள் அனைவரும் வருத்தமடைந்து, அதற்குச் சிலை வைக்க முடிவு செய்தனர். விருது பெற்ற ஒரு சிற்பியும் அவரது மருமகனும் இணைந்து, எல்டோவின் நினைவாக ஒரு களிமண் சிலையை உருவாக்கினர். அந்தச் சிலை இப்போது கிராமத்தின் நடுவில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், எல்டோ உயிரோடு இருந்தபோது ‘மில்க் கேக்’ விரும்பி சாப்பிடுமாம். அதனால் அப்பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் மில்க் கேக்கிற்கு ‘எல்டோ கேக்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம், ஒரு தெருநாய் எப்படி ஒரு கிராமத்தின் அன்பை வென்றது என்பதைக் காட்டுகிறது.