இந்தியா

குடியிருப்புப் பகுதியில் பயங்கர தீவிபத்து.. பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் சார்மினாரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. கிருஷ்ணா என்பவரின் வீட்டில் தீ பற்றி எரிந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடியிருப்புப் பகுதியில் பயங்கர தீவிபத்து.. பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு!
குடியிருப்புப் பகுதியில் பயங்கர தீவிபத்து.. பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு!
குல்ஜார் ஹவுஸ் அருகே ஸ்ரீ கிருஷ்ணா பேர்ல்ஸ் குடியிருப்புப் பகுதியில் அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு தங்கியிருந்தவர்கள் உள்ளிட்டு ஏராளமானோர் விபத்தில் சிக்கிக் கொண்டனர். இதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தகவலறிந்து சென்ற தீயணைப்புப் படையினர் விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து சிகிச்சைப் பலனின்றி 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் நிலையில், எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி உள்ளதாக முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

இந்த கோர விபத்தில் சிக்கிய 16 பேரை தீயணைப்பு வீரர்கள் காப்பாற்றி உள்ளதாகவும், தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. தீ விபத்துக்கு மின்சார ஷார்ட் சர்க்யூட் காரணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து வருகிறது.

தீ விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார். “மீட்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ள அவர், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் என்று உறுதியளித்துள்ளார்.