இந்தியா

போர் நிறுத்தம் குறித்து டிரம்ப் ஏன் முதலில் சொன்னார்? பிரதமருக்கு ராகுல் காந்தி கடிதம்

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சண்டை நிறுத்தத்தை சம்மந்தப்பட்ட இரு நாடுகள் தவிர்த்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முதலில் அறிவித்தது ஏன்? என்பது குறித்து விவாதிக்க உடனடியாக நாடாளுமன்ற கூட்டத்தொடரை கூட்ட பிரதமருக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

போர் நிறுத்தம் குறித்து டிரம்ப் ஏன் முதலில் சொன்னார்? பிரதமருக்கு ராகுல் காந்தி கடிதம்
opposition to convene a special session of Parliament immediately
ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு இந்தியா பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலுள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது ”ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் அதிரடி தாக்குதல் நடத்தியது.

இதைத்தொடர்ந்து இரவு நேரங்களில் ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லையோர கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய அனைத்து தாக்குதல் முயற்சிகளையும் இந்திய ராணுவம் முறியடித்தது. இந்திய ராணுவம், பாகிஸ்தானின் லாகூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் உள்ள ராணுவ கட்டடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தான் ராணுவத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.

தாக்குதல் சம்பவம் நிறுத்தம்:

கடந்த 3 நாட்களாக இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்து வந்த பரஸ்பர தாக்குதல் சம்பவங்களினால் பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் எல்லையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். இரு நாடுகளிடையே போர் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்ட நிலையில் உலக நாடுகளின் கவனம் இந்தியா, பாகிஸ்தான் பக்கம் திரும்பியது.

இந்த நிலையில், இந்தியாவும் – பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று தெரிவித்தார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இரவு முழுவதும் நடந்த நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் சமாதானத்திற்கு ஒப்புக்கொண்டதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என குறிப்பிட்டு இருந்தார்.


உலக அரங்கில் இந்தியா பொருளாதார ரீதியில் முன்னணி வகிக்கும் நாடாக விளங்கும் நிலையில், அமெரிக்காவின் தலையீடு இந்தியா-பாகிஸ்தான் இடையே எதற்கு வந்தது? தாக்குதல்கள் நிறுத்தப்படுவதாகவும், இரு நாடுகளிடையே சமாதானம் ஏற்பட்டுள்ளதாகவும் முதலில் அமெரிக்கா உலகிற்கு அறிவிப்பது எதற்காக? என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இந்நிலையில் தான் இதுக்குறித்து விவாதிக்க உடனடியாக நாடாளுமன்ற கூட்டத்தொடரை கூட்ட வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
Image

தற்போது ஜம்மு பகுதியில் அமைதி திரும்பியுள்ள நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையேயான அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை வருகிற12 ஆம் தேதி பிற்பகலில் நடைபெறும் என இந்தியாவின் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.