கடந்த 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப்பயணிகள் 27 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் எதிரொலியாக 48 சுற்றுலாத் தளங்கள் மூடப்பட்டுள்ளன. தொடர்ந்து பஹல்காம் தாக்குதல் தீவிரவாதி ஹாசிம் மூஸா பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் பாரா கமாண்டோ வீரர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஹாசிம் மூஸாவை லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பிற்கு பாகிஸ்தான் ராணுவம் அனுப்பியிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. அணுகுண்டு வீசுவோம் என பாகிஸ்தான் அமைச்சர் எச்சரிக்கை விடுத்த நிலையில், பயங்கரவாதத்தை ஒருபோதும் பொறுத்துக்கொள்ளமுடியாது என ஐ.நாவில் இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து ஜம்மு காஷ்மீரின் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
இந்த கூட்டத்தின் முடிவில், அட்டாரி வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியர்கள் இந்தியா வரத் தடை, தற்போது இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவு, பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் மூடல், சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், காஷ்மீர் எல்லைக்கட்டுப்பாடு கோட்டுப் பகுதியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் அரங்கேறும் நிலையில் இந்திய பாதுகாப்பு படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவின் வான்வழித் தாக்குதலை கண்காணிக்க ரேடார் அமைப்புகளை எல்லையில் பாகிஸ்தான் நிறுத்தியுள்ளது. தொடர்ந்து பிரதமர் தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்கும் இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கக் கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.