ஆபரேஷன் சிந்தூர் மற்றும் இந்தியாவின் தொடர்ச்சியான எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கு சர்வதேச நாடுகளின் ஆதரவை பெற மத்திய அரசு குழு அமைத்துள்ளது. 7 பேர் கொண்ட குழுவில், திமுக சார்பில் கனிமொழி, காங்கிரஸ் சார்பில் சசிதரூர், பாஜக சார்பில் ரவிசங்கர் பிரசாத், பாய்ஜெய்ந்த பாண்டே, ஐக்கிய ஜனதா தளம் சார்பில் சஞ்சய் குமார் ஜா, தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் சுப்ரியா சுலே மற்றும் சிவசேனா சார்பில் ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே இடம்பெற்றுள்ளனர். இந்த மாத இறுதியில் 7 எம்பிக்கள் கொண்ட குழு அமெரிக்கா, இங்கிலாந்து, அரபு நாடுகளுக்கு சென்று அங்குள்ள தலைவர்களிடம் பாகிஸ்தானுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்க உள்ளது.
பயங்கரவாதத்தை எதிர்த்து சர்வதேச ஆதரவை பெரும் நோக்கில் மத்திய அரசு எடுத்த முக்கியமான முடிவாக, 7 எம்பிக்கள் கொண்ட பிரதிநிதி குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்தியா மேற்கொண்டு வரும் "ஆபரேஷன் சிந்தூர்" மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து சர்வதேச நாடுகளின் புரிதலும், ஆதரவும் பெறவே இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கியமான எம்.பிக்கள் இடம்பெற்றுள்ளனர். திமுகவைச் சார்ந்த கனிமொழி, காங்கிரஸின் முக்கிய பேச்சாளரான சசிதரூர், பாஜகவின் மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் மற்றும் பாய்ஜெய்ந்த பாண்டே, ஐக்கிய ஜனதா தளத்தின் சஞ்சய் குமார் ஜா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதியாக சுப்ரியா சுலே மற்றும் சிவசேனாவின் ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் இதில் இடம்பெற்றுள்ளனர். இது அரசியல் கட்சி வேறுபாடுகளைக் கடந்த, நாட்டின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட ஒற்றுமைமிக்க குழுவாக உள்ளது.
இந்த குழு, இந்த மாத இறுதியில் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் சில முக்கியமான அரபு நாடுகளுக்கு பயணம் செய்யவுள்ளது. அங்கு, அந்த நாடுகளின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் சந்தித்து, பாகிஸ்தான் ஆதரவு பெறும் பயங்கரவாத அமைப்புகளின் செயற்பாடுகள் குறித்து எடுத்துரைத்து, இந்தியாவின் நடவடிக்கைகளுக்கான ஆதரவை கோர இருக்கின்றது.
இந்த முயற்சி, பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு தொடர்பாக உலக நாடுகளில் இந்தியாவின் பார்வையை பரப்பி, அதன் மீது சர்வதேச அழுத்தங்களை உருவாக்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது. இது இந்திய அரசின் பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு கொள்கையில் ஒரு முக்கியமான முன்னேற்றம் என்றும் அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.