கிரிக்கெட் மட்டை ஒன்றைத் திருடுவதற்காக, தனது பக்கத்து வீட்டுச் சிறுமியை 21 முறை கத்தியால் குத்தி கொடூரமாகக் கொலை செய்ததாக 14 வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தெலங்கானா மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கொலையின் பின்னணி
சஹாஸ்ரா என்ற பெயர் கொண்ட அந்த சிறுமி, 6-ஆம் வகுப்பு படித்து வந்தார். இவருடைய தந்தை ஒரு பைக் மெக்கானிக் ஆகவும், தாய் ஆய்வக உதவியாளராகவும் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 18 ஆம் தேதி, சஹாஸ்ராவின் சகோதரர் பள்ளிக்குச் சென்ற நிலையில், சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, வீட்டிற்குள் நுழைந்த 14 வயது சிறுவன் ஒருவன், அவளை 21 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளான்.
போலீசார் விசாரணை
இதையடுத்து, மதியம் வீட்டிற்குத் திரும்பிய சிறுமியின் தந்தை, தனது மகள் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு விசாரணையை தொடங்கினர்.
மேலும், இந்த கொலை வழக்கை விசாரிக்க பல குழுக்கள் அமைக்கப்பட்டது. இந்த நிலையில், தாக்குதல் நடந்த நான்கு நாட்களுக்குப் பிறகு, பக்கத்து வீட்டில் வசித்து வந்த 14 வயது சிறுவனைப் பிடித்து விசாரித்தனர். போலீஸ் விசாரணையில், அவன் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
கிரிக்கெட் மட்டைக்காக கொலை
போலீஸ் வட்டாரங்கள் அளித்துள்ள தகவலின்படி, கிரிக்கெட் மட்டையைத் திருடுவதற்காகவே இந்த கொலையைச் செய்ததாக அந்த சிறுவன் ஒப்புக்கொண்டான். ஆனால், ஒரு மட்டையைத் திருடுவதற்காக இவ்வளவு கொடூரமான முறையில் ஒரு கொலை நடந்ததை போலீசார் நம்ப மறுக்கின்றனர். ஒரு சாதாரண திருட்டுக்கு எதற்காக கத்தியை எடுத்துச் சென்றான் என்பது குறித்தும், வேறு ஏதேனும் நோக்கம் இருக்கிறதா என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து அவனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.