இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை மும்பையில் பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அவர்களைச் சந்தித்துப் பேசினார். இந்த இருதரப்புப் பேச்சுவார்த்தையின்போது விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் (CETA) கையெழுத்தானது. இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை வலுப்படுத்தும் வகையில் வர்த்தகம், பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் கல்வி போன்ற முக்கியப் பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
மோடி பேச்சு: இந்தியா-இங்கிலாந்து இயற்கை கூட்டாளிகள்
இரு நாட்டு சந்திப்புக்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது,
"விஷன் 2030" இன் கீழ் இந்தியா-இங்கிலாந்து உறவுகளை வலுப்படுத்துவதை இரு தலைவர்களும் வலியுறுத்தினோம். இந்த ஆண்டு ஜூலை மாதம் நான் இங்கிலாந்து சென்றபோது, விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தில் (CETA) கையெழுத்திட்டோம்.
பிரதமர் ஸ்டார்மருடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு, ஒன்பது இங்கிலாந்து பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் வளாகங்களைத் திறக்கின்றன. இது இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான கல்வி மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் ஒரு முக்கியமான படியாகும்.
இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான இறக்குமதி செலவுகளைக் குறைக்கும், இளைஞர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும், வர்த்தகத்தை அதிகரிக்கும். மேலும் நமது தொழில்கள் மற்றும் நுகர்வோருக்குப் பயனளிக்கும். ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சில மாதங்களுக்குள், இதுவரை இல்லாத அளவுக்குப் மிகப்பெரிய வணிகக் குழுவுடன் சேர்ந்து நீங்கள் இந்தியாவிற்கு வருகை தருவது, இந்தியா-இங்கிலாந்து கூட்டாண்மையில் புதுப்பிக்கப்பட்ட வீரியத்தைக் குறிக்கிறது. இந்தியாவும் இங்கிலாந்தும் இயற்கையான கூட்டாளிகள் என்று மோடி தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் கருத்து
பிரதமர் மோடியுடன் இணைந்து கூட்டறிக்கையை வெளியிட்ட கெய்ர் ஸ்டார்மர் பேசியதாவது, சில மாதங்களுக்குப் பிறகு இந்தப் பயணத்தை மேற்கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். எதிர்காலத்தை மையமாகக் கொண்டு, வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும் ஒரு புதிய, நவீன கூட்டாண்மையை நாங்கள் உருவாக்கி வருகிறோம்.
ஜூலை மாதம் இங்கிலாந்து-இந்தியா விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தை (CETA) முடித்தோம். இதில், சுங்கவரிகளைக் குறைத்தல், வளர்ச்சியை விரைவுபடுத்தவும், நமது மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், நமது நாடுகளில் வாழ்க்கையை மேம்படுத்தவும் ஒருவருக்கொருவர் சந்தைகளுக்கான அணுகலை அதிகரிப்பது ஆகியவை அடங்கும்.
இந்தச் சந்திப்பு மூலம் இரு நாடுகளின் உறவிலும், குறிப்பாக வர்த்தகம் மற்றும் கல்வியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.