Boat Airdopes Alpha Deadpool Edition in Indian Market : ‘டெட் பூல் & வுல்வெரின்’ படத்திற்காக மார்வெல் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இந்தியாவின் முன்னணி கேட்ஜெட் நிறுவனமான போட் (Boat) பாட்னர்ஷிப் தொடங்கியுள்ளது. அதனை உறுதி செய்யும் விதமாக டெட் பூல் படம் பதியப்பட்ட போட் ஏர்டோப்ஸ் ஆல்ஃபா டெட்பூல் எடிஷன் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த பிரத்தியேகமான ஏர்டோப்ஸ் Flipkart-ல் ரூ. 999-க்கு விற்பனையாகி வருகிறது.
இதுகுறித்து பேசிய போட் நிறுவத்தின் CMO அமன் குப்தா, “‘டெட் பூல் & வுல்வெரின்’ படத்திற்காக மார்வெல் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் புதிதாக பாட்னர்ஷிப் தொடங்கியுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தற்போது நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ள இந்த ஸ்பெஷல் எடிஷன் ஏர்டோப்ஸ் மூலம் தனித்துவத்தையும் பிரமாண்டமான ஆடியோ குவாலிட்டியையும் மக்களுக்கு வழங்கியிருக்கிறோம். இந்த புதிய படைப்பிற்கு மக்கள் தங்களது ஆதரவை தர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
போட் ஏர்டோப்ஸ் ஆல்ஃபா டெட்பூல் எடிஷன் அம்சங்கள்:
இந்த ஸ்பெஷல் எடிஷன் ஏர்டோப்கள் டெட்பூல்தீம் கொண்டுள்ளதால் சிவப்பு மற்றும் கருப்பு வண்ணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சார்ஜிங் கேஸின் ஒரு பக்கத்தில், மார்வெல் ஸ்டுடியோஸ் டெட் பூல் பிராண்டிங்கும், மறுபக்கம் போட் பிராண்டிங்கும் இடம்பெற்றுள்ளன. ஒருமுறை சார்ஜ் செய்தாலே போதும் 35 மணி நேரம் வரை தங்குதடையின்றி பயன்படுத்தலாம். USB Type -C சார்ஜர் மூலம் இதனை எளிதாக சார்ஜ் செய்யலாம். மேலும் இதில் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சமும் இடம்பெற்றுள்ளது.
இதுமட்டுமில்லாமல் கிளியரான ஆடியோ குவாலிட்டி மற்றும் சக்திவாய்ந்த பாஸ் வழங்குவதற்காக 13மிமீ டிரைவர்கள் இதில் அமைந்துள்ளன. மேலும் வாய்ஸ் கால் அழைப்பின் தரத்தை மேம்படுத்த ENx தொழில்நுட்பமும் இதில் இடம்பெற்றுள்ளது. அதோடு இது டச் கண்ட்ரோல் வசதியும் பெற்றுள்ளது. கேமிங்கிற்கான 50ms லோ டெண்டன்சி அம்சத்துடன் கூடிய பீஸ்ட் மோட் அம்சமும் இதில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன் விலை ரூ. 3,490 என நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தற்போது Flipkart மற்றும் போட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் ரூ.999க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் அதிரடி விலை குறைவு வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் மார்வெல் ரசிகர்களை குறி வைத்து களமிறக்கப்பட்ட இந்த ஏர்டோப்கள் ஸ்பெஷல் எடிஷன் என்பதால் குறைந்த யூனிட்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. டெட்பூல் படம் பதியப்படாத இதே ஏர்டோப்கள் ரூ. 790க்கு Flipkart-ல் விற்பனையாகி வருகிறது.