இந்தியா

சாதி மறுப்புத் திருமணம் செய்த நர்சிங் மாணவர் சுட்டுக்கொலை.. மாமனார் வெறிச்செயல்!

சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட 25 வயது நர்சிங் மாணவர், தனது மாமனாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாதி மறுப்புத் திருமணம் செய்த நர்சிங் மாணவர் சுட்டுக்கொலை.. மாமனார் வெறிச்செயல்!
Bihar Man Kills Son-In-Law In Front Of Daughter
பீகாரில் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட 25 வயது நர்சிங் மாணவர், தனது மாமனாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவரின் மனைவி கண்முன்னே நடந்த இந்தச் கொடூர சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர் சுட்டுக்கொலை

தர்பங்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பி.எஸ்.சி. நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்த ராகுல் குமார், அதே கல்லூரியில் முதல் ஆண்டு படித்து வந்த தன்னூ பிரியா என்பவரை நான்கு மாதங்களுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். தன்னூவின் குடும்பத்தினர் இந்த சாதி மறுப்புத் திருமணத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், நேற்று மாலை தனது மகள் பயிலும் மருத்துவக் கல்லூரிக்கு சென்ற தன்னூ பிரியாவின் தந்தை பிரேம்சங்கர் ஜா, தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் ராகுலை சுட்டுக் கொன்றார். இது குறித்து தன்னூ கூறியதாவது, "எனது தந்தை என் கணவரை என் கண்முன்னே நெஞ்சில் சுட்டார். என் கணவர் என் மடியில் விழுந்தார்," என அதிர்ச்சியுடன் ம் தெரிவித்தார். தனது தந்தையும் சகோதரர்களும் தங்களை மிரட்டியதால், பாதுகாப்பு கேட்டு ஏற்கனவே நீதிமன்றம் சென்றிருந்ததாகவும் அவர் கூறினார்.

கொலையாளிக்கு தர்ம அடி

கொலை நடந்ததும், ராகுலின் நண்பர்களும் சக மாணவர்களும் சேர்ந்து பிரேம்சங்கர் ஜாவைத் தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக பாட்னாவுக்கு மாற்றப்பட்டுள்ளார். மாணவர் மரணத்திற்கு நீதி கேட்டு மருத்துவமனை வளாகத்தில் மாணவர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போலீசார் கூட்டத்தைக் கட்டுப்படுத்த பெரும் சிரமப்பட்டனர்.

போலீஸ் விசாரணை

சம்பவம் குறித்து தகவல் அறிந்த தர்பங்கா மாவட்ட ஆட்சியர் கௌஷல் குமார் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஜகந்நாத் ரெட்டி ஆகியோர் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து வந்து நிலைமையை ஆய்வு செய்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.