நெட்டிசன் ஒருவர், நடுத்தர வர்க்கத்தினருக்கு கொஞ்சம் நிவாரணம் கொடுங்கள் என நிதியமைச்சருக்கு எக்ஸ் தளத்தில் கோரிக்கை வைத்த நிலையில், நிர்மலா சீதாராமன் அந்த பதிவிற்கு உடனடியாக பதிலளித்துள்ளார்.
மத்திய அரசு நடுத்தர வர்க்கத்தினருக்கு வரிச்சுமையை அதிகரித்துள்ளது தொடர்பாக, தொழிலதிபர்கள் மற்றும் பணம் படைத்தவர்களுக்கே இந்த அரசு இருப்பதாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், நெட்டிசன் ஒருவர் நிதியமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தன்னுடைய எக்ஸ் தளத்தில் ராமாயணம் தொடர்பாக பதிவிட்டிருந்தார். அதில் துஷார் சர்மா என்ற நெட்டிசன் ஒருவர், நிதியமைச்சரின் பதிவிற்கு “நமது நாட்டிற்கு நீங்கள் ஆற்றும் பங்களிப்பு, முன்னெடுக்கும் முயற்சிகளை பாராட்டுகிறோம். நடுத்தர வர்க்கத்தினருக்கு கொஞ்சம் நிவாரணம் கொடுங்கள்”. இது ஒரு இதயப்பூர்வமான வேண்டுகோள் என்று கோரிக்கை வைத்திருந்தார்.
நெட்டிசன் கோரிக்கைக்கு உடனடியாக பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உங்கள் அக்கறையை நான் பாராட்டுகிறேன். "உங்களின் கனிவான வார்த்தைகளுக்கும், நல்ல புரிதலுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் மக்களுக்கு செவி சாய்க்கக் கூடிய அரசு ஆகும். மக்களின் குரல்களைக் கேட்கிறது மற்றும் கவனிக்கிறது. உங்கள் புரிதலுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி. உங்களின் கருத்து மதிப்புமிக்கது" என பதிலளித்துள்ளார். என்று குறிப்பிட்டுள்ளார்.
நெட்டிசன் ஒருவரின் கோரிக்கைக்கு உடனடியாக பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எக்ஸ் தளத்தின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
Thank you for your kind words and your understanding. I recognise and appreciate your concern.
— Nirmala Sitharaman (@nsitharaman) November 17, 2024
PM @narendramodi ‘s government is a responsive government. Listens and attends to people’s voices. Thanks once again for your understanding. Your input is valuable. https://t.co/0C2wzaQtYx