பிரதமர் மோடி தனது உரையில், "இந்த தீபாவளியை உங்களுக்கு இரட்டை தீபாவளியாக மாற்றப் போகிறேன். அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்களை நாங்கள் கொண்டு வருகிறோம். இது நாடு முழுவதும் வரிச்சுமையைக் குறைத்து, சாதாரண மக்களுக்குப் பயன்படும். அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களின் மீதான வரி விகிதங்கள் கணிசமாகக் குறைக்கப்படும், இதனால் பொருட்கள் மலிவாகக் கிடைக்கும். இது நாட்டின் பொருளாதாரத்தையும் வலுப்படுத்தும்" என்றார்.
கடந்த 2017ஆம் ஆண்டு ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டு எட்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இந்த மாற்றங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதாக அவர் தெரிவித்தார். இதற்காக ஒரு உயர்நிலை குழு அமைக்கப்பட்டு, மாநிலங்களுடனும் கலந்தாலோசிக்கப்பட்ட பிறகு இந்த சீர்திருத்தங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக மோடி குறிப்பிட்டார்.
பிரதமர் மோடி தனது உரையில் வெளியிட்ட பிற முக்கிய அறிவிப்புகள்:
செமிகண்டக்டர் சிப் ஆலைகள்: 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் முதல் செமிகண்டக்டர் சிப் ஆலைகள் அமைக்கப்பட்டு உற்பத்தி தொடங்கப்படும். சமீபத்தில் ஒடிசா, பஞ்சாப், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் 4 ஆலைகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.
அணு மின் உற்பத்தி: 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் அணு மின் உற்பத்தி திறனை பத்து மடங்குக்கு மேல் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 10 புதிய அணு உலைகளுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
பொருளாதார இலக்கு: 2047ஆம் ஆண்டுக்குள் 10 ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைய இந்தியா தயாராகி வருகிறது.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு: இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், 3.5 லட்சம் இளைஞர்கள் மாதந்தோறும் ரூ.15,000 உதவித்தொகை பெறுவார்கள்.
தன்னம்பிக்கை இந்தியா: இந்தியா எந்தவொரு தீங்கு விளைவிக்கும் கொள்கைகளையும் ஏற்றுக்கொள்ளாது என்றும், வெளிநாடுகளைச் சார்ந்திருப்பது பேரழிவுக்கு வழிவகுக்கும் என்றும் பிரதமர் மோடி கூறினார். உற்பத்திச் செலவைக் குறைத்து, உலக சந்தைகளில் நமது தயாரிப்புகளின் தரத்தை நிரூபிக்க வேண்டிய நேரம் இது என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஆழ்கடல் ஆய்வுத் திட்டம்: சூரிய சக்தி, ஹைட்ரஜன், நீர் மற்றும் அணுசக்தியில் விரிவாக்கத்துடன், கடல் வளங்களைப் பயன்படுத்த தேசிய ஆழ்கடல் ஆய்வுத் திட்டம் தொடங்கப்படும்.
ஜெட் இன்ஜின்கள்: இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஜெட் என்ஜின்கள் விரைவில் உருவாக்கப்படும்.
மக்கள் தொகை ஆய்வு: இந்திய குடிமக்களின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் உரிமைகளைப் பாதுகாக்க மக்கள் தொகை ஆய்வுப் பணி மேற்கொள்ளப்படும்.