இந்தியாவின் பிரபல தொழில் அதிபர் ரத்தன் டாடா, 1937ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி மும்பையில் பிறந்தார். இவர் டாடா குழும தலைவராக 1991 முதல் 2012 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார் ரத்தன் டாடா. ரத்தன் டாடாவின் தலைமையின் கீழ் 50 மடங்கு லாபத்தை பெருக்கியது. டாடா குழுமம் ரூ. 1 லட்சம் காரை அறிமுகம் செய்து நடுத்தர மக்களின் கனவை நனவாக்கியவர் ரத்தன் டாடா.
டாடா குழுமத்தின் முக்கிய சமயங்களில் போது தலைமை வகித்தது, டாடாவின் அடுத்த பாய்ச்சலுக்கு காரணமாக இருந்தது முதல் தற்போது இளம் தொழில் முனைவோரின் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வழிகாட்டுவது என ரத்தன் டாடாவின் தொழில்துறை பயணம் சிறப்பு வாய்ந்தது.
ஒரு தொழிலதிபராக இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவில் பெரும் மதிப்பும், மரியாதையும் பெற்றவர் ரத்தன் டாடா என்று சொன்னால் மிகையாகாது. மேலும், பிசினஸ்ஸில் லாபம் பார்த்தது மட்டுமல்லாமல், இந்த பணத்தை பிறருக்கு உதவ பயன்படுதியவர் தான் டாடா. டாடா அறக்கட்டளை மருத்துவம், கல்வி, கலை உள்ளிட்ட விஷயங்களில் தொண்டு பணிகளை செய்து வருகிறது.
இந்நிலையில் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா (வயது 86) உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். அவரின் குரல் ஓய்ந்தாலும், அவர் விதைத்துவிட்டு சென்ற எண்ணங்கள் என்றென்றும் ஒளித்துக்கொண்டே இருக்கும்.
ரத்தன் டாடா உலகிற்கு சொன்ன 5 முக்கிய மந்திரங்கள்:
➤"சரியான முடிவுகளை எடுப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் முடிவுகளை எடுக்கிறேன், பின்னர் அவற்றைச் சரியாகச் செய்கிறேன்."
➤ "பல விஷயங்கள் உள்ளன, நான் மீண்டும் வாழ வேண்டும் என்றால், நான் அதை வேறு வழியில் செய்வேன். ஆனால் என்னால் செய்ய முடியாமல் போனதைத் திரும்பிப் பார்க்க விரும்பவில்லை."
➤"மக்கள் உங்கள் மீது எறியும் கற்களை எடுத்து ஒரு நினைவுச்சின்னம் கட்ட அவற்றைப் பயன்படுத்துங்கள்."
➤"வேகமாக நடக்க விரும்பினால் தனியாக நடக்கவும். ஆனால் வெகுதூரம் நடக்க விரும்பினால் ஒன்றாக நடக்கவும்"
மேலும் படிக்க: ”பிரம்மாண்டத்தை இழந்தது இந்தியா..” டாடா மறைவுக்கு முதல்வர் இரங்கல்
➤"இரும்பை யாராலும் அழிக்க முடியாது, ஆனால் அதன் சொந்த துருவால் முடியும். அதேபோல், ஒரு நபரை யாராலும் அழிக்க முடியாது, ஆனால் அவரது சொந்த மனநிலையால் முடியும்."