”பிரம்மாண்டத்தை இழந்தது இந்தியா..” டாடா மறைவுக்கு முதல்வர் இரங்கல்
இந்தியா ஒரு பிரம்மாண்டத்தை இழந்துவிட்டதாக ரத்தன் டாடா மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்தியா ஒரு பிரம்மாண்டத்தை இழந்துவிட்டதாக ரத்தன் டாடா மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ரத்தன் டாடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் அவரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் நேற்று தகவல் வெளியானது. இந்நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி ரத்தன் டாடா உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ரத்தன் டாடா தொழில்துறையின் உண்மையான டைட்டன் மற்றும் பணிவு மற்றும் இரக்கத்தின் கலங்கரை விளக்கம் என புகழாரம் சூட்டியுள்ளார்.
அவரது தொலைநோக்கு தலைமை டாடா குழுமத்தை வடிவமைத்தது மட்டுமல்லாமல், அவரது நெறிமுறை வணிக நடைமுறைகளுக்கு உலகளாவிய அளவுகோலை அமைத்ததாக தெரிவித்துள்ளார்.
தேசத்தைக் கட்டியெழுப்புதல், கண்டுபிடிப்புகள் ஆகியவற்றில் அவரது இடைவிடாத அர்ப்பணிப்பு மில்லியன் கணக்கான உயிர்களின் மீது அழியாத முத்திரையை பதித்துள்ளதாக கூறியுள்ளார்.
இந்தியா ஒரு பிரம்மாண்டத்தை இழந்துவிட்டது என்றும், ஆனால் அவரது வாழ்க்கை வரலாறு தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும் என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: சோகத்தில் இந்தியா.. ரத்தன் டாடா மறைவுக்கு முகேஷ் அம்பானி இரங்கல்..
இந்த தருணத்தில் அவரது குடும்பத்தினருக்கும், சக ஊழியர்களுக்கும், ஒட்டுமொத்த டாடா குழுமத்திற்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் மு.க.ஸ்டாலின் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
What's Your Reaction?






