குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில் மஹிசாகர் ஆற்றின் மீது உள்ள காம்பிரா பாலத்தின் ஒரு பகுதி புதன்கிழமையான இன்று (ஜூலை 9) காலை இடிந்து விழுந்ததில் குறைந்தது நான்கு வாகனங்கள் ஆற்றில் விழுந்துள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
காலை 7:30 மணியளவில் நடந்த இந்த விபத்து சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்ததாக பத்ரா காவல் ஆய்வாளர் விஜய் சரண் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். 10-க்கும் மேற்பட்ட நபர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் யாராவது ஆற்றில் மூழ்கியுள்ளார்களா? அடித்துச் செல்லப்பட்டுள்ளார்களா? என தொடர்ந்து தேடும் பணி நடைப்பெற்று வருகிறது.
வதோதரா மாவட்டத்தில் உள்ள பத்ராவை, ஆனந்த் மாவட்டத்துடன் இணைக்கும் இந்தப் பாலம் நீண்ட காலமாக பாழடைந்த நிலையில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. பலமுறை கோரிக்கை விடுத்தும், இதனை சீரமைக்க அரசு எந்த பணிகளையும் மேற்கொள்ளவில்லை என உள்ளூர் பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். பாலம் இடிந்த விழுந்த செய்தி பரவியதும், முஜ்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபடத் தொடங்கினர்.
பாலம் இடிந்து விழுந்த தருணத்தின் போது, பாலத்தில் சென்றுக் கொண்டிருந்த இரண்டு லாரிகள் மற்றும் இரண்டு வேன்கள் ஆற்றில் விழுந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மீட்பு பணி தொடர்ந்து நடைப்பெற்று வரும் நிலையில் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
இடிந்து விழுந்த பாலம் வதோதரா நகரத்திலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது மற்றும் சவுராஷ்டிரா நோக்கி பயணிக்கும் போக்குவரத்து வாகனங்களுக்கு ஒரு முக்கிய பாதையாக காம்பிரா பாலம் செயல்பாட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.