அழகுணர்வுடன் நேர்த்தியாகப் புடவை கட்டுவது இன்றைக்கு ஒரு தனிக் கலையாகவே மாறிவிட்டது. சென்னையைச் சேர்ந்த தியா மகேந்திரன், தனியார் வங்கி உதவி மேலாளராக இருந்துள்ளார். ஒரு கட்டத்தில், அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு, பிறருக்குப் புடவை கட்டிவிடுவதையே முழுநேரத் தொழிலாக விரும்பிச் செய்துவருகிறார்.
அவருடன் குமுதம் சிநேகிதி இதழுக்காக அகிலா ஜ்வாலா மேற்கொண்ட நேர்காணலின் தொகுப்பு பின்வருமாறு-
இந்த வேலையை எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள்?
"அடிப்படையில் நானொரு கணினி அறிவியல் பொறியாளர். கல்லூரி காலத்திலிருந்தே நான் புடவை கட்டும் விதம், எல்லோராலும் பாராட்டப்படும். பிறகு, தனியார் வங்கி ஒன்றில் உதவி மேலாளராக பணி செய்து கொண்டிருந்தேன். எனக்கு இயல்பாகவே புடவையை அழகாகக் கட்டுவதில் ஆர்வம் அதிகம். வாரம் ஒருமுறை புடவைக் கட்டிக்கொண்டு செல்வேன். அது, 'Saree draping' பிரபலமாகிக் கொண்டிருந்த சமயம். அடிப்படையில் எனக்கிருந்த ஆர்வத்தின் காரணமாக மிக நேர்த்தியாகவே புடவை கட்டுவேன். இருந்தும், வீடியோக்கள் பார்த்தும் நிறைய கற்றுக்கொண்டேன்.
பிறகு என்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டு, வேறு வேலைக்கு முயற்சித்தேன். இரண்டு மூன்று நேர்காணல்களுக்கும் சென்றேன். அந்த இடைவெளியில்தான், 'நமக்கு மிகவும் பிடித்த, புடவை சுட்டும் கலையையே ஏன் ஒரு பிஸினஸாகவே எடுத்து செய்யக்கூடாது? எனத் தோன்றியது. உடனே, புடவை கட்டும் மாதிரி பதிவுகளை இன்ஸ்டாகிராமில்
பகிர்ந்தேன். எங்கள் அப்பார்ட் மென்ட்டிலேயே இருவர், தங்கள் வீட்டு விசேஷங்களுக்காக என்னை அணுகினார்கள். இப்படி ஆரம்பமானதுதான், இந்தத் தொழில்"
திருப்திகரமான வருமானம் கிடைக்கிறதா?
"ஆரம்பத்தில், இரண்டு மூன்று பேர்தான் வாடிக்கையாளர்களாக இருந்தனர். அதன் மூலமாக 1000-2,000 ரூபாய் வருமானம் கிடைத்தது. இப்போது, 80 ஆயிரம் முதல் 1 லட்ச ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிவிட்டது. அதுமட்டுமல்லாமல்; 'புடவை ட்ரேப்பிங்' கலையைக் கற்க விரும்புபவர்களுக்கும், தொழிலாகச் செய்ய விரும்புபவர்களுக்கும் வழிகாட்டுகிறேன்."
எங்கிருந்தெல்லாம் உங்களுக்கு அழைப்புகள் வருகின்றன?
"திருமணம், உபநயனம், கிரஹப்பிரவேசம் உள்ளிட்ட வீட்டு விசேஷங்களுக்கு மட்டுமல்லாமல்; மாடலிங் துறை, ஃபேஷன் ஷோ, சின்னச் சின்ன விளம்பரங்கள், சின்னத்திரைத் தொடர்கள் எனப் பல இடங்களில் இதற்கு வரவேற்பு அதிகமாக இருக்கிறது."
வெவ்வேறு உடல்வாகு கொண்டவர்களுக்கெனப் பிரத்யேகமான யுக்திகளைக் கையாள்கிறீர்களா?
"ஆம்! அவரவர்களுக்கு ஏற்றாற்போல், உடல் ஒல்லியாகவோ குண்டாகவோ தோற்றமளிக்கும் விதத்தில் புடவைக் கட்டமுடியும். 'Pre Pleating' முறையானது தற்போது பிரபலமாகிவிட்டது. புடவையை எளிதாகக் கட்டும்விதமாக அழகாக 'ப்ளீட்ஸ்' வைத்து, 'Pin' செய்து வைப்பது, எளிதாக புடவை கட்ட உதவியாக இருக்கிறது. வாடிக்கையாளர்களை நேரிலோ அல்லது புகைப்படத்திலோ பார்த்தாலே, எனக்குப் போதுமானது. அவருடைய உடலை அளவு எதுவும் எடுக்காமல், 'ட்ரேப்' செய்வதுதான் என்னுடைய ஸ்பெஷாலிட்டி”
இப்போதெல்லாம் புடவை கட்டுவதை மட்டுமே சிலர் தனியாகச் செய்கிறார்களே?
"சரிதான்! முக ஒப்பனை, சிகையலங்காரம், புடவை கட்டுவது என ஒவ்வொன்றுக்கும் தனித் தனியாகத்தான் இப்போதெல்லாம் 'புக்' செய்கிறார்கள். அப்படிப் போகும்போது, மணப்பெண்ணின் சகோதரிகள், சிநேகிதிகள், உறவுகள். இவ்வளவு ஏன், மணப்பெண்ணின் அம்மாவும்கூட, என்னிடம் விரும்பி புடவை கட்டிக் கொள்கிறார்கள். ஒரு விழாவிற்குப் போனால், குறைந்தபட்சம் 10- 15 பேராவது என்னிடம் ஆர்வத்துடன் வந்து, புடவை கட்டிக்கொள்கிறார்கள்."
விதவிதமான ஸ்டைல்களில் புடவை கட்டமுடியுமா?
“முடியும்! 'இந்தோ வெஸ்டர்ன் ஸ்டைலை'தான் நான் பின்பற்றுகிறேன். இதில், பல்வேறு வகை 'ட்ரேப்பிங்' முறைகள் இருக்கின்றன. இரட்டை புடவைகள், துப்பட்டா புடவை, பேன்ட் ஸ்டைல் எனப் பலவகைகள். அதேபோல், சாதாரண மடிப்பு, பபுள் மடிப்பு, மயில்தோகை மடிப்பு எனத் தினுசு தினுசான மடிப்புகள் வைத்து, புதுமையான ஸ்டைலில் கட்டலாம்."
பட்டுப் புடவைகளுக்கு இன்றும் மவுசு இருக்கிறதா?
"எப்போதுமே பட்டுப் புடவைகள்தான் டிரெண்டிங். விழா என்றால், பட்டுப் புடவைதான் என்றுமே ஸ்பெஷல். அது, நம் பாரம்பரியம், கலாசாரத்துடன் தொடர்புடையது. எனவே, பட்டுப்பு வைக்கு மவுசு குறையும் என்று தோன்றவில்லை.”
நீங்கள் வகுப்பு எடுப்பது நேரடியாகவா, ஆன்லைனிலா?
"முகநூலில், பெண்கள் குழுவில் இருக்கிறேன். இன்ஸ்டாகிராம் மூலமாகத்தான் பலருக்கும் வகுப்புகள் எடுக்கிறேன். வீடியோ வகுப்புகளும் உண்டு”
மறக்கமுடியாத பாராட்டு ஏதாவது கிடைத்திருக்கிறதா?
"நடிகை அனுஹாசன், சின்னத்திரை நடிகை ஹரிகா எனப் பலரும் மனம் திறந்து பாராட்டியிருக்கிறார்கள். இதுபோல, வாடிக்கையாளர்களிடமிருந்து எனக்குப் பாராட்டுகள் கிடைக்கும்போது, மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். சமீபத்தில்கூட, உடற்பருமன் அதிகமுள்ள ஒரு பெண்மணி, 'இதுவரை இவ்வளவு அழகாய் நான் புடவை கட்டிக்கொண்டதே இல்லை!" என நெகிழ்ச்சியுடன் கூறினார். என்னிடம் ஆடை அலங்காரம் செய்துகொண்டு, 'ஃபேஷன் ஷோ'வில் கலந்துகொண்ட பெண்தான் வெற்றி வாகை சூடினார் என்பதில் பெருமை"
இந்தத் தொழிலில் சவால்களைச் சந்தித்துள்ளீர்களா?
"செல்லுமிடங்களில் புடவையை மடிக்க போதுமான வசதி இருக்காது. இது, மிகப்பெரிய சவாலாக இருக்கும். ஆனால், இப்போது அதற்காகவே 'ஃபோல்டிங் டேபிள்' ஒன்றை எடுத்துச் செல்கிறேன். அம்மாவும் கணவரும் எனக்கு முழுமையாக சப்போர்ட் செய்கிறார்கள். வாடிக்கையாளர்கள் மட்டுமல்ல; என்னிடம் இந்தக் கலையைக் கற்றுக்கொள்பவர்களின் திருப்தி மட்டுமே எனக்கு முக்கியம். ஆர்வத்துடன் முழுமையாகக் கற்கும்வரை அவர்களுக்கு உதவிசெய்வேன். அந்தளவுக்கு நான் இந்தத் தொழிலை நேசிக்கிறேன்" என்றார், தியா மகேந்திரன்.
(கட்டுரை ஆசிரியர்: அகிலா ஜ்வாலா, குமுதம் சிநேகிதி இதழ் | 29.5.2025)