சர்க்கரைக்கு குட்-பாய் சொல்வது அவ்வளவு எளிதான காரியம் இல்லையென்றாலும், நீண்ட கால ஆரோக்கியத்திற்கு சர்க்கரையினை கைவிடுவதை தவிர வேற வழியில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.
ஏன் சர்க்கரை தவிர்க்க வேண்டும்?
சர்க்கரை நம் உடலுக்கு தேவையான ஆற்றலை தரும் கார்போஹைட்ரேட்களை வழங்கினாலும், அதன் தயாரிப்பு முறையானது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களை உள்ளடக்கியுள்ளது தான் பிரச்னை. இயற்கையாகவே மற்ற உணவு மூலங்களிலிருந்து நமது உடலுக்கு தினசரி போதுமான கார்போஹைட்ரேட்கள் கிடைக்கிறது. இதனைத்தாண்டி நாம் கூடுதலாக சர்க்கரையினை அதிகளவில் எடுத்துக் கொள்வதால் நீரிழிவு, இதய நோய், உடல் பருமன் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.
டெல்லியிலுள்ளா சி.கே.பிர்லா மருத்துவமனையின் டாக்டர் மனிஷா அரோரா கூறுகையில், சர்க்கரையினை தொடர்ந்து 90 நாட்களுக்கு எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் பல்வேறு பயன்களை பெற முடியும் என்கிறார். ஆய்வுகளின் அடிப்படையில் 90 நாட்களுக்கு தொடர்ந்து சர்க்கரையினை எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் ஆரம்பத்தில் உடல் சந்திக்கும் பிரச்னைகளும், அதன்பின் கிடைக்கும் நன்மைகளும் குறித்து விரிவாக காணலாம்.
இன்றிலிருந்து சுகர் எடுத்துக்கொள்ள வேண்டாம் என நீங்கள் முடிவெடுத்து அதனை நடைமுறைப்படுத்தினால் ஆரம்பக்கட்டத்தில் தலைவலி, உடல் சோர்வு, செரிமான பிரச்னை, எரிச்சல் தன்மை, இனிப்பு மீதான ஏக்கம் போன்றவை ஏற்படும் என்கிறார் டாக்டர் மனிஷா அரோரா.
சர்க்கரை தவிர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்:
பொதுவாகவே எந்த ஒரு புதிய பழக்கத்தையும் நமது உடலும், மனதும் ஏற்றுக்கொள்ள குறைந்தது 21 நாட்கள் வரை எடுத்துக் கொள்ளும். அந்த பழக்கம் நிரந்தரமாக மாற சுமார் 66 நாட்கள் வரை எடுத்துக் கொள்ளும். அதுப்போல தான் சுகர் வேண்டாம் என நீங்கள் முடிவெடுக்கும் போது சில அசௌகரியங்களை சந்திப்பீர்கள். ஆனால், கட்டுக்கோப்புடன் கடைப்பிடித்து விட்டால் உங்கள் உடலுக்கு நீங்கள் தான் ராஜா.
சுகருக்கு நீங்கள் நோ சொல்லத் தொடங்கிய பிறகு, ஆரோக்கியமான மற்றும் முழு ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளில் கவனம் செலுத்த ஆரம்பியுங்கள். போதுமான அளவிற்கு தண்ணீர் குடியுங்கள். இயற்கையாகவே இனிப்புச் சுவை கொண்ட பழங்களை தேவைக்கேற்ப எடுத்துக் கொள்ளுங்கள். 90 நாட்களுக்கு பிறகு நீங்களே ஒரு மேஜிக்கை உணருவீர்கள். அதன் விவரங்கள் பின்வருமாறு-
உடல் பருமன் குறையும். பொதுவாகவே சர்க்கரை அதிக கலோரிகளை கொண்டது. நீங்கள் சர்க்கரையை தவிர்ப்பதன் மூலம், கலோரி உட்கொள்ளல் அளவு குறைவதால் குறிப்பாக வயிற்றுப் பகுதியிலுள்ள கொழுப்பு குறையும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவானது கட்டுப்பாட்டுக்குள் வரும். சர்க்கரையினை தவிர்ப்பது இன்சுலின் அளவை இயல்பு நிலைக்கு கொண்டுவர உதவும்.
சர்க்கரையினை அதிகளவில் எடுத்துக் கொள்ளுவது, முகப்பரு மற்றும் சரும சுருக்கங்கள் போன்ற வயதான தோற்றத்திற்கு காரணமாக அமையும். சர்க்கரையினை தவிர்ப்பதன் மூலம் சருமம் பளபளப்பாக மாறுவதை உங்களால் உணர முடியும். நன்றாக தூக்கம் வரும். பல் சொத்தை மற்றும் ஈறு நோய்களின் அபாயத்தை குறைக்கும். அப்புறம் என்ன, நாளைக்கே டைம் டேபிள் போட்டு ’நோ சுகர் சேலஞ்சு’க்கு ரெடியாகுங்கள்.