’குரோஷே' என்கிற 'கொக்கிப் பின்னல்' கலையில் கலக்கிவருகிறார், சென்னையைச் சேர்ந்த சுபஸ்ரீ நடராஜன். இவர், 'மதர் இந்தியா குரோஷே குயின்ஸ்' என்ற குழுவின் மூலமாக பல்வேறு வகையான கொக்கிப் பின்னல் ஆடைகளை உருவாக்கி, இதுவரை 6 கின்னஸ் உலக சாதனைகள் படைத்திருக்கிறார்.
'குரோஷே' என்பது என்ன வகையான கலை?
'ஹக்' என்கிற கொக்கியோடு கூடிய ஊசியைப் பயன்படுத்தி, ஆடை பின்னும் கலைதான் 'குரோஷே’. இது, ஐயாயிரம் ஆண்டு தொன்மையான கலை. இதை இத்தாலி நாட்டினர்தான் முதன் முதலில் உருவாக்கினார்கள். அந்தக் காலத்து ராணிகள், தங்கள் ஓய்வு நேரங்களில் தங்கநூல் கொண்டு, பலவகையான குரோஷே படைப்புகளை உருவாக்கினார்கள். ஆரம்ப காலகட்டத்தில் இது அரச குடும்பத்தினருக்கும் பிரபுக்களுக்கும் உரிய கலையாகவே இருந்தது. இந்தக் கலையானது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவுக்கு வந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
அந்தக் காலத்தில் அரசக் குடும்பத்தினர் தங்கநூல்களைப் பயன்படுத்தினாலும்கூட, தற்காலத்தில் சாமானிய மக்களும் கையாளும் ஒரு கலையாக இது ஜனரஞ்சகமாகிவிட்டது. தற்போது, பருத்தி நூல், அக்ரலிக் யார்ன், கம்பளி நூல், நைலான் கயிறு, வாழைநார் உள்பட ஏராளமானவற்றைப் பயன்படுத்தி, 'கொக்கிப் பின்னல் முறையில் பலவித பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. இதுக்குறித்து சுபஸ்ரீ நடராஜனுடன் மேற்கொண்ட நேர்க்காணலின் விவரம் பின்வருமாறு-
இந்தக் கலையில் ஆர்வம் வந்தது எப்படி?
"எனக்கு சொந்த ஊர் கும்பகோணம், பக்கத்தில் திருநாகேஸ்வரத்தில் என் பாட்டி வசித்தார். அவர், வெள்ளியாலான ஒரு கொக்கி ஊசியை வைத்துக்கொண்டு, வெண்மையான பருத்தி நூலைப் பயன்படுத்தி, கொக்கிப் பின்னல்' முறையில்
பனியன், டாப்ஸ் உள்ளிட்ட ஆடைகள் உருவாக்குவதை நான் பார்த்திருக்கிறேன். பாட்டி வீட்டுக்குப் போகும்போதெல்லாம், அவருடைய கைகள் வெகு லாகவமாக கொக்கி ஊசியை நூலில் கொடுத்து வாங்குவதை பிரமிப்போடு பார்த்துக்கொண்டிருப்பேன்.
ஒருமுறை, நவராத்திரியின்போது அவர் தன் வீட்டு கொலுப்படிகளில் விரிப்பதற்கு ’கொக்கிப் பின்னல்' மூலமாகவே ஒரு பெரிய விரிப்பைத் தயார் செய்தார். அதில், கொலுவில் இடம்பெறும் பலவகை பொம்மைகளின் உருவங்களை இடம்பெறச் செய்திருந்தார். கொலுவுக்கு வந்தவர்கள் எல்லோரும் அதைப் பார்த்துவிட்டு, பாட்டியை ரொம்பவும் பாராட்டினார்கள்.
அதைப் பார்த்தபோது, பாட்டியைப் போல குரோஷே செய்தால், பலருடைய பாராட்டை பெறலாம் என்ற எண்ணம் எனக்குள்ளே ஆழமாக ஊறிப்போனது. அப்போது எனக்கு 10 வயது இருக்கலாம். ஆனால், நானும் குரோஷே கற்றுக்கொண்டு உலக சாதனைகள் புரிந்ததையெல்லாம் பார்க்காமல், என் பாட்டி மறைந்துவிட்டார் என்பதில் எனக்கு மிகவும் வருத்தம்.
நான் படிக்கிற காலத்தில் தையல், ஓவியம், ஹேண்ட் எம்பிராய்டரி, மெஷின் எம்பிராய்டரி, குரோஷே எனப் பலவிதமான கலைகளையும் கற்றுக்கொண்டேன். ஓய்வு நேரத்தில் அவற்றைச் செய்து பழகுவேன். கும்பகோணத்தில் நடைபெறும் கலைக் கண்காட்சிகளுக்குத் தவறாமல் செல்வேன். கற்றுக்கொண்டவற்றையெல்லாம் பயிற்சிசெய்து பழகுவேன். அப்படித்தான், குரோஷே ஆர்வமும் வந்தது"
’மதர் இந்தியா குரோஷே குயின்ஸ்' குழுவின் துவக்கம் எப்படி நிகழ்ந்தது?
"படிப்பை முடித்துவிட்டு, திருமணமாகி மும்பை சென்றுவிட்டேன். அதன்பின், குழந்தைகள், அவர்களின் படிப்பு என்று பலவகையான குடும்பப் பொறுப்புகள். மூத்த மகளின் திருமணத்துக்குப் பிறகு குடும்பப் பொறுப்புகள் ஓரளவுக்குக் குறைந்த சூழ்நிலையில் குரோஷே மீது என் கவனம் திரும்பியது. 'தனி ஒரு பெண்ணாக குரோஷே மூலமாக நாம் என்ன பெரிதாக சாதிக்கமுடியும்? குரோஷே கலையில் திறமை வாய்ந்த பெண்கள் பலரையும் ஒன்றுதிரட்டி, எல்லோருமாக இணைந்தால் உலக சாதனை புரியலாம்!' என்ற எண்ணம் ஏற்பட்டது.
என் மகள், 'இன்று சமூக ஊடகங்களின் வீச்சு பெரிய அளவில் உள்ளது. முகநூல் மூலமாக குரோஷே கலை தெரிந்த பெண்கள் பலரையும் ஒருங்கிணைத்து, உலக சாதனை புரிந்தால், அது ஒரு சாதனையாக மட்டுமல்லாமல்; 'பெண்கள் ஒன்றுபட்டால் எதையும் சாதிக்கலாம்' என்ற பாஸிடிவ் செய்தியையும் இந்த உலகத்துக்குக் கொடுக்கும்' என்று என்னை ஊக்கப்படுத்தினாள்.
அதன்படி, முகநூலில் 2015-ம் ஆண்டு 'மதர் இந்தியா குரோஷே குயின்ஸ்' என்ற குழுவை ஆரம்பித்தேன். துவக்கத்தில் சுமார் 150 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தார்கள். இரண்டாண்டுகளில் 1,500 உறுப்பினர்கள் சேர்ந்தார்கள். இப்போது அமெரிக்கா,
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பல்வேறு அரபுநாடுகள் என்று உலகத்தின் 3 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2,500 பெண்கள் இந்தக் குழுவில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே இந்தியப் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது."
குரோஷேவில் என்னென்ன வகையான உலக சாதனைகள் நிகழ்த்தி இருக்கிறார்கள்?
"2015-ல் எங்கள் குழு துவங்கிய 6 மாத காலத்தில் நாங்கள் எங்கள் முதல் உலக சாதனையைச் செய்துமுடித்தோம். தென்னாப்பிரிக்காவில் 3,350 ச.மீ பரப்புள்ள குரோஷே துணி உருவாக்கியது முந்தைய கின்னஸ் சாதனை. சென்னை துரைப்பாக்கம் எம்.என்.எம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் 11,449 ச.மீ பரப்பளவு கொண்ட குரோஷே துணி தயாரித்து, அதனை முறியடித்தோம். 2017-ம் ஆண்டு அதே கல்லூரி வளாகத்தில் 7 அங்குல அகலத்தில் 14.09 கி.மீ நீளமுள்ள ஸ்கார்ஃப் தயாரித்து, 2-வது கின்னஸ் சாதனையை நிகழ்த்தினோம்.
2018-ல் மனித இனத்தின் பரிணாம வளர்ச்சி துவங்கி, புவிவெப்பமடைதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரையிலான இந்தப் பூமியின் கதையைச் சொல்லும் உருவங்களை குரோஷேவில் உருவாக்கி, காட்சிப்படுத்தினோம். அதில், 64 ஆயிரம் குரோஷே படைப்புகள் இடம்பெற்றன. 2019-ல், 54 ஆயிரம் கிறிஸ்துமஸ் டெகரேஷன் தொடர்பான குரோஷே பொருள்களை உருவாக்கி, 4-வது சாதனை படைத்தோம்.
கொரோனா காலம் முடிந்த பின்னர், கடந்த ஆண்டு 7 அங்குலம் X 60 அங்குலம் அளவில் 4,500 ஸ்கார்ஃப்கள் தயாரித்து
சாதனை படைத்தோம். கேன்சர் விழிப்புணர்வு நோக்கத்துடன் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியின் முடிவில், அந்த ஸ்கார்ஃப்களை, கேன்சரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும், கேன்சர் நோயாளிகளுக்கும் இலவசமாக வழங்கினோம்.
அண்மையில், 5 X 5 அங்குல சதுர அளவில் 1 லட்சத்து 500 குரோஷே துணித் துண்டுகள் உருவாக்கி, 'இந்திய ஜவான்களின் சேவைக்கு சல்யூட்! என்று சொல்லி, 6-வது முறையாக கின்னஸ் சாதனை படைத்தோம். இவற்றைக் கொண்டு போர்வைகள், ஸ்கார்ஃப்கள் தயாரித்து, ராணுவத்தினருக்கு விநியோகிக்க அனுப்பிவைக்கப் போகிறோம்".
கின்னஸ் சாதனைகள் புரிவதுதான் தங்களுடைய ஒரே லட்சியமா?
"இல்லை! கின்னஸ் சாதனை முயற்சிகள் எல்லாம் எங்களுக்கு நாங்களே ஊக்கமளித்துக் கொள்வதற்காகவும், பெண்கள் இணைந்தால் உலக சாதனை படைக்கமுடியும் என்று உலகத்துக்குத் தெரிவிக்கவும்தான். பெண்களைச் சொந்தக்காலில் நிற்கவைப்பதுதான் எங்களுடைய முதன்மையான நோக்கம். எங்கள் குழுவினருக்குத் தேவையான மூலப்பொருள்களை வழங்கி, அவற்றைக் கொண்டு அவர்கள் தயாரிக்கும் குரோஷே தயாரிப்புகளை நாங்கள் ஏற்றுமதி செய்கிறோம்.
அதன்மூலமாக குழுவின் உறுப்பினர்கள் வருவாய் ஈட்டுகிறார்கள். அதுமட்டுமல்லாமல்; குரோஷே கலை தெரியாத பெண்களுக்கு நாங்கள் பயிற்சியளித்து, அவர்களை சுயதொழில் முனைவோராக மாற்றிவருகிறோம். இது, இந்தியப் பெண்கள் மத்தியில் நிகழும் ஓர் 'அமைதிப் புரட்சி என்றால், அது சற்றும் மிகையல்ல!" என்றார், சுபஸ்ரீ நடராஜன்.
(கட்டுரை: எஸ். சந்திரமௌலி / குமுதம் சிநேகிதி / 10.07.2025)