நடிகரும், இயக்குநருமான மாதவன் சமீபத்தில் கர்லி டேல்ஸ் உடனான தனது நேர்காணலில் தனது டயட் முறையினை வெளிப்படையாக தெரிவித்தார். இது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதற்கு காரணம் பொதுவாக திரைத்துறையில் இருப்பவர்கள் படத்திற்கு ஏற்றவாறு திடீரென உடல் எடையினை குறைக்க ஜிம்மில் தவம் கிடப்பது, சிலர் ஊசிகளை பயன்படுத்துவது போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். ஆனால், மாதவனோ நான் எவ்வித ஜிம் உடற்பயிற்சியும் மேற்கொள்ளாமல் 21 நாட்களில் உடல் எடையினை குறைத்துள்ளேன் என தெரிவித்தது தான்.
இதுத்தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகிய நிலையில், வீடியோவினை ரீ-டிவிட் செய்து உடல் எடையினை குறைக்க சில டிப்ஸ்களை வழங்கியுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு-
1. Intermediate Fasting: (இடையிடையே உண்ணாவிரதம்)
ஒருநாளைக்கு தொடர்ந்து சில மணிநேரங்கள் மட்டும் உண்ணாமல் இருக்கும் முறையாகும். இதனை மாதவன் தீவிரமாக கடைபிடிக்கிறாராம். Intermediate Fasting-ல் பல்வேறு வகைகள் உள்ளன.
உதாரணத்திற்கு 16:8 முறை: 16 மணிநேரம் உண்ணாவிரதம் இருந்து 8 மணிநேரத்திற்குள் சாப்பிடுவது. இதில் மற்றொரு வகை, 5:2 முறை: 5 நாள்களுக்கு சாதாரணமாக 2,000 கலோரிகள் சாப்பிடுவதும், மற்ற 2 நாள்களில் கலோரிகளை 500 -600 ஆகக் கட்டுப்படுத்துவதும். மற்றுமொரு முறை, ஒருநாள் விட்டு ஒருநாள்: ஒருநாள் 2,000 கலோரிகள் சாப்பிடுவது, மறுநாள் 500 கலோரிகள் சாப்பிடுவது.
Intermittent fasting, heavy chewing of food 45-60 times( drink your food and chew your water) .. last meal at 6.45 pm .( only cooked food -nothing raw AT ALL post 3 pm ) .. early morning long walks and early night deep sleep( no screen time 90 min before bed) … plenty of fluids… https://t.co/CsVL98aGEj
— Ranganathan Madhavan (@ActorMadhavan) July 18, 2024
2. மென்று உண்ணுதல்:
உணவை நன்கு மென்று சாப்பிட வேண்டும் என மாதவன் அறிவுறுத்துகிறார். அவர் இதுக்குறித்து கூறுகையில், உங்கள் உணவை குடித்துவிட்டு, தண்ணீரை மென்று சாப்பிடுங்கள் என்கிறார். இதன் அர்த்தம், உணவை நன்கு மென்று சாப்பிடுவதன் மூலம் செரிமானம் எளிதில் நடைப்பெறும். உடல் அதிகமான ஊட்டச்சத்துகளை எடுத்துக்கொள்ளும் என்பதாகும்.
3. அதிகாலை: நடைப்பயிற்சி
ஜிம் போன்ற அதிதீவிர உடற்பயிற்சிகளுக்கு பதிலாக, நடைப்பயிற்சியினை மேற்கொண்டதாக மாதவன் தெரிவித்துள்ளார். நடைப்பயிற்சியின் பலன் அனைவரும் அறிந்ததே. நடைபயிற்சி மனதை அமைதிப்படுத்தவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
4. கடைசி உணவு மாலை 6:45 மணிக்குள்
Intermediate Fasting மேற்கொள்ளும் தருணத்தில் கூட உங்களது கடைசி உணவினை மாலை 6:45 மணிக்குள் எடுத்துவிடுமாறு மாதவன் அறிவுறுத்துகிறார். அதிலும், பிற்பகல் 3 மணிக்கு பிறகு பச்சையான பழங்கள் அல்லது சாலட்களைத் தவிர்த்து சமைத்த உணவினை மட்டும் உட்கொண்டுள்ளார்.
5. நோ ஸ்கீரினிங்க்:
தூங்க செல்வதற்கு 90 நிமிடங்களுக்கு முன்பாக எவ்வித திரை சாதனங்களையும் காண்பதில்லை எனத் தெரிவித்துள்ளார் மாதவன். தூங்கச் செல்வதற்கு முன்பாக மொபைல் போன், டிவி, லேப்டாப் போன்றவற்றிலிருந்து விலகி இருங்கள் எனவும் மாதவன் அறிவுறுத்துகிறார்.
இவை தவிர்த்து, தண்ணீர், ஜூஸ் போன்ற நீர் ஆதாரங்களை அதிகம் எடுத்துக்கொள்ளுமாறும், பச்சை காய்கறி மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளவும் மாதவன் அறிவுறுத்தியுள்ளார்.