இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ‘வெண்ணிலா கபடி குழு’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் விஷ்ணு விஷால். இப்படம் அவருக்கு மிகப் பெரிய பெயரை பெற்று தந்தது. தொடர்ந்து, ‘நீர்பறவை’, ‘ராட்சசன்’ போன்ற வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்தார். வெகு சில படங்களில் நடித்திருந்தாலும் நடிகர் விஷ்ணு விஷால் மக்கள் மனதில் இடம் பிடித்த நடிகர்களில் ஒருவராக விளங்குகிறார்.
இரண்டாவது திருமணம்
இவர் கடந்த 2010-ஆம் ஆண்டு ரஜினி நட்ராஜ் என்பவரை திருமணம் செய்தார். ஆனால், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 2018-ஆம் ஆண்டு பிரிந்தனர். விஷ்ணு விஷால் - ரஜினி தம்பதியினருக்கு ஆர்யன் என்ற மகன் உள்ளார். தொடர்ந்து, கடந்த 2021-ஆம் ஆண்டு பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா என்பவரை நடிகர் விஷ்ணு விஷால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
பெண் குழந்தை
விஷ்ணு விஷால் - ஜுவாலா தம்பதியினருக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆன நிலையில் அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ள விஷ்ணு விஷால் தங்களது திருமண நாளன்று குழந்தை பிறந்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவர்களுக்கு திரைப்பிரபலங்கள் உட்பட பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.