சினிமா

98-வது ஆஸ்கர் விருது விழா.. வெளியான முக்கிய அப்டேட்!

98-வது ஆஸ்கர் விருது விழா கடந்த ஆண்டு 2026 மார்ச் 15 ஆம் தேதி நடைபெறும் எனவும், விருதுக்கான பரிந்துரைகள் வரும், ஜனவரி 22ம் தேதி வெளியாகும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

98-வது ஆஸ்கர் விருது விழா.. வெளியான முக்கிய அப்டேட்!
98-வது ஆஸ்கர் விருது விழா.. வெளியான முக்கிய அப்டேட்!
உலக சினிமாவில் மிக உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர் விருதாகும். சினிமாவில் நடிக்க வரும் ஒவ்வொருவருக்கும் ஒரு முறையாவது ஆஸ்கர் விருதை வாங்க வேண்டும் என்பதே லட்சியமாக உள்ளது. 2025 ஆம் ஆண்டிற்கான 97 ஆவது ஆஸ்கர் விருது விழா கடந்த மார்ச் 3 ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றது.

98-வது ஆஸ்கர் விருது விழா அடுத்தாண்டு மார்ச் 15ஆம் தேதி நடைபெறும் என்றும், ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைகள் 2026 ஜனவரி 22ம் தேதி வெளியாகும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருது வழங்குவதற்கு பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்படுகிறது. ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் திரைப்படங்களை, வாக்கெடுப்பின் அடிப்படையில், தேர்வு செய்வர். சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைப்படம், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த ஆடைவடிவமைப்பாளர், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைத்து பிரிவுகளிலும் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் சிறந்த ஸ்டண்ட் வடிவமைப்பிற்கான புதிய ஆஸ்கர் பிரிவு அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், 2028-ம் ஆண்டு நடைபெற உள்ள 100-வது ஆஸ்கர் விழா முதல் இந்த பிரிவில் விருது வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அதன்படி, அடுத்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு கலைஞர்கள் தங்களது படைப்புகளை பரிந்துரைப்பதற்கான மனுக்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் டிசம்பர் 2025 இல் அறிவிக்கப்படும் எனக்கூறப்பட்டுள்ளது. இந்த விழா 98வது 2026 ஆம் ஆண்டு மார்ச் 15, ஞாயிற்றுக்கிழமை அன்று அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் டால்பி திரையரங்கில் நடைபெறஉள்ளது. இந்த விழாவை பிரபல அமெரிக்க தொகுப்பாளரான கோனன் ஓ’பிரையன் தொகுத்து வழங்குவார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.