மலையாளத் திரையுலகில் ரூ.250 கோடி வசூலைக் கடந்த முதல் திரைப்படம் என்ற வரலாற்று சாதனையை 'எம்புரான்' திரைப்படம் படைத்துள்ளது. இதற்கு முன்னர் மலையாளத்தில் வெளிவந்த மலையாள திரைப்படமான மஞ்சும்மெல் பாய்ஸ் (ரூ.242 கோடி) என்ற அதிக வசூலை குவித்தது. தற்போது மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தின் வசூலை எம்புரான் திரைப்படத்தின் சாதனையை முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2019 ஆம் ஆண்டு மோகன்லால் - பிரித்விராஜ் கூட்டணியில் வெளிவந்த லூசிஃபர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, லூசிஃபர் 2-பாகத்திற்கு ரசிகர்கள் காத்திருந்தனர். இதனைத்தொடர்ந்து, 6 வருடங்கள் கழித்து அதன் இரண்டாம் பாகமான எல்2: எம்புரான் திரைப்படம் கடந்த மாதம் மார்.27 ஆம் தேதி வெளியானது. முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகத்திற்கும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.
பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளுடன் இத்திரைப்படம் வெளிவந்துள்ளதாக பல்வேறு தடைகள் வந்த நிலையிலும், எல்2: எம்புரான் திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ், சுராஜ், அபிமன்யூ சிங், சாய் குமார் உள்ளிட்ட பலர் இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர்.
எம்புரான் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை எம்புரான் திரைப்ப்டம் உலகளவில் செய்துள்ள வசூல் 10 நாட்களில் ரூ. 245 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
சினிமா
மலையாள திரையுலகில் முதன்முறையாக..புதிய வரலாறு படைத்த 'எம்புரான்' திரைப்படம்!
பிருத்திவிராஜ் - மோகன்லால் கூட்டணியில் வெளிவந்த எல்-2: எம்புரான் திரைப்படம் மலையாள திரையுலகில் ரூ.250 கோடி வசூலைக் கடந்த முதல் திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.