தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம்வருபவர் நடிகர் சூர்யா. இவரது 'கங்குவா' படம் தோல்வியை தொடர்ந்து, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான ' ரெட்ரோ' திரைப்படம் உலகளவில் ரூ.234 கோடி வசூல் செய்து கலவையான விமர்சனத்தை பெற்றது.
சூர்யாவின் லைன் அப்..
சூர்யா தற்போது தனது 45-வது படத்தில் நடித்து வருகிறார். ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதைதொடர்ந்து, இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் 'வாடிவாசல்' படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு படங்களுக்கு பிறகு 'வாத்தி' மற்றும் 'லக்கி பாஸ்கர்' பட இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க மலையாள நடிகை மமிதா பைஜூ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும், பகத் பாசில் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற 'ஆவேஷம்' பட இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கமல்ஹாசன் தயாரிப்பில் சூர்யா?
இதற்கிடையில், நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்தை இயக்குநர் அருண் குமார் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர் 'சித்தா' மற்றும் 'வீர தீர சூரன்' ஆகிய வெற்றி படங்களை இயக்கியுள்ளார். ஆனால் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும், இந்த புதிய கூட்டணி குறித்த தகவல் வெளியானதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.