சினிமா

கோவையில் ரகசியமாக நடந்த சமந்தாவின் 2வது திருமணம்!

கோவையில் நடிகை சமந்தாவுக்கும் இயக்குநர் ராஜ் நிதிமோருக்கும் இன்று காலை திருமணம் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோவையில் ரகசியமாக நடந்த சமந்தாவின் 2வது திருமணம்!
Samantha Second Marriage
தமிழ் மற்றும் தெலுங்கின் முன்னணி நடிகையான சமந்தா, இயக்குநர் ராஜ் நிதிமோர் என்பவரை இன்று (டிசம்பர் 1) ரகசியத் திருமணம் செய்துகொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் இருவரும் கடந்த சில நாட்களாகக் காதலித்து வருவதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், இந்தத் திருமணம் நடந்துள்ளதாகச் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமந்தா - ராஜ் நிதிமோர் திருமணம்

கோவையில் உள்ள புகழ்பெற்ற ஈஷா யோகா மையத்தில் உள்ள லிங்க பைரவி கோயிலில் இன்று காலை நடிகை சமந்தாவும் இயக்குநர் ராஜ் நிதிமோரும் திருமணம் செய்துகொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் திருமணம் குறித்து சமந்தா தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ மறுப்பும் அல்லது உறுதிப்படுத்தலும் வெளியிடப்படவில்லை.

சமந்தா - நாக சைதன்யா விவாகரத்து

சமந்தா இதற்கு முன்பு கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் நாக சைதன்யாவைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட நிலையில், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 2021 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர். நாக சைதன்யா, விவாகரத்துக்குப் பிறகு நடிகை சோபிதா துலிபாலாவை கடந்தாண்டு திருமணம் செய்துகொண்டார். தற்போது சமந்தாவும் இயக்குநர் ராஜ் நிதிமோரை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

ராஜ் நிதிமோர் குறித்த விவரம்

இயக்குநர் ராஜ் நிதிமோர் மற்றும் கிருஷ்ணா டி.கே. இருவரும் இணைந்து ராஜ் & டி.கே. என்ற பெயரில் பல பிரபல பாலிவுட் திரைப்படங்களையும் இணையத் தொடர்களையும் இயக்கியும், தயாரித்தும் உள்ளனர். இவர்கள் இயக்கி, தயாரித்த 'தி ஃபேமலி மேன்', 'ஃபார்ஸி', 'கன்ஸ் அண்ட் குலாப்ஸ்' உள்ளிட்ட இணையத் தொடர்கள் மிகவும் பிரபலமானவை. சமீபத்தில் 'தி ஃபேமலி மேன்' 3-ம் பாகம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. ராஜ் நிதிமோர் இயக்கிய 'தி ஃபேமலி மேன் 2'-ம் பாகத்தில் தான் சமந்தா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.