தமிழ்த் திரையுலகில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர் மற்றும் வசனகர்த்தா எனப் பன்முகத் திறமைகளைக் கொண்ட கலைஞராக அறியப்படுபவர் ஆர். பார்த்திபன். தனது தனித்துவமான அணுகுமுறையாலும், வழக்கமான சினிமா இலக்கணங்களை உடைக்கும் துணிச்சலாலும், தமிழ்ச் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளார்.
1984 ஆம் ஆண்டு இயக்குநர் கே.பாக்யராஜின் உதவி இயக்குநராகத் தனது திரைப்பயணத்தைத் தொடங்கிய பார்த்திபன், 1989 இல் "புதிய பாதை" திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே திரையுலக பிரபலங்கள், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இதனைத் தொடர்ந்து பொண்டாட்டி தேவை, உள்ளே வெளியே, ஹவுஸ் புல், இவன், குடைக்குள் மழை, கதை திரைக்கதை வசனம் இயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக, ஒத்த செருப்பு சைஸ் 7, இரவின் நிழல் என தொடர்ச்சியாக படங்களை இயக்கியும், தயாரித்தும் வந்துள்ளார்.
இயக்கங்களுக்கு நடுவே வித்தியாசமான கதாப்பாத்திரங்களில் நடித்து நடிகராகவும் அசத்தி வருகிறார். இந்நிலையில் தனது சமூக வலைத்தள பக்கத்தில், தன் வீட்டிற்குள் வழித்தவறி உயர பறக்க முடியாத சூழ்நிலையில் வந்த ஆந்தை ஒன்றினை பத்திரமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தது தொடர்பாக வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள காட்சிகள் முறையே: இயக்குநர் பார்த்திபன் வீட்டின் வெளிப்புறத்தில் ஆந்தை ஒன்றினை காகங்கள் சூழ்ந்து கொண்டு தாக்க முயல்கின்றன. ஆந்தையினை மீட்ட போது தான் தெரிய வந்துள்ளது, ஆந்தை பறக்க முடியாத சூழ்நிலையில் உள்ளது என. ஆந்தை மிகவும் தனிமையில் வாடுவதை உணர முடிகிறது. இதன்பின், வனத்துறையினருக்கு அழைப்பு விடுத்துள்ளார் பார்த்திபன். வனத்துறையினர் ஆந்தையினை பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள் விட்டுள்ளனர்.
தனது பதிவில், இந்த வீடியோவினை பதிவிட்டு ”ஆந்தை வீட்டிற்கு வந்தால் மஹாலக்ஷ்மி (big budget producer) வந்தது போலவாம். விளக்கு வைத்ததும் மஹாலக்ஷ்மியை வெளியே அனுப்பக்கூடாது என்ற சாங்கியம் வேறு. இருட்டே ஆந்தையின் சுதந்தர லோகம்” என வழக்கமான தனது பாணியில் ஆந்தையின் வருகை குறித்து பதிவிட்டுள்ளார்.
பார்த்திபன் இயக்கத்தில் கடைசியாக 2024 ஆம் ஆண்டு டீன்ஸ் என்கிற திரைப்படம் வெளியாகியது. இதனைத் தொடர்ந்து புதிய படத்தினை இயக்கும் முயற்சியில் தீவிரமாக வேலை செய்து வருகிறார் பார்த்திபன்.

ஆந்தை வீட்டிற்கு வந்தால் மஹாலக்ஷ்மி(big budget producer)வந்தது போலவாம்.
— Radhakrishnan Parthiban (@rparthiepan) July 30, 2025
விளக்கு வைத்ததும் மஹாலக்ஷ்மியை வெளியே அனுப்பக்கூடாது என்ற சாங்கியம் வேறு. இருட்டே ஆந்தையின் சுதந்தர லோகம். எனவே…. pic.twitter.com/qt56BO2OsV