சினிமா

Thug life: இணையத்தில் வைரலாகும் ‘ஜிங்குச்சா’ பாடல் வீடியோ

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லிரிக்கல் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Thug life: இணையத்தில் வைரலாகும் ‘ஜிங்குச்சா’ பாடல் வீடியோ
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தக் லைஃப்’. இந்த படத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, அபிராமி, நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வழங்குகிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ‘தக் லைஃப்’ திரைப்படம் வருகிற ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில், இயக்குநர் மணிரத்னம், நடிகர்கள் கமல்ஹாசன், சிம்பு, அசோக் செல்வன், திரிஷா, அபிராமி, இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், ‘தக் லைஃப்’ படத்தின் முதல் பாடலான ‘ஜிங்குச்சா..’(Jinguchaa) பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. கமல்ஹாசன் வரிகளில் புதுப்பெண், மாப்பிள்ளையை கேலி செய்வது போன்று உருவாகியுள்ள இந்த பாடலின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.