தமிழ் சினிமாவில் வெகு சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும், அனைவரின் நினைவிலும் இருக்கும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஸ்ரீராம் நடராஜன் எனப்படும் ஸ்ரீ. வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இருகப்பற்று, வில் அம்பு போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நல்ல பரீட்சையமான முகமாகவே மாறிப்போனார். இவர் பிக்பாஸிற்கு வந்தபோது, நிறைய பேர் அவரை ஆதரித்தனர்.
ஸ்ரீ தொடர்ந்து சினிமாவில் ஜெயிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பட வாய்ப்பின்றி அவர் காணாமல் போனார். சமீபத்தில் சமூக வலைதளத்தில் நடிகர் ஸ்ரீ பகிர்ந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் அவரது ரசிகர்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. அரைகுறையான ஆடைகளுடன், தலைமுடிக்கு கலரிங் செய்து, எலும்புகள் தெரியும் வண்ணம் மெலிந்த தேகத்துடன் சில புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் ”என்ன தான்யா ஆச்சு உனக்கு?”, படவாய்ப்புகள் இல்லாததால் இப்படு ஆகிவிட்டாரா? என்றெல்லாம் பதிவிட்டு வந்தனர். இன்னும் சிலர், ஸ்ரீ இப்படி ஆவதற்கு போதை பழக்கம் தான் காரணமா? என்றெல்லாம் கேள்விகளை எழுப்பி வந்தனர். ஸ்ரீயின் இந்த செயல் சமூக வலைதளத்தில் பெரும் விவாதத்தையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நடிகர் ஸ்ரீயின் உடல் நிலை குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நடிகர் ஸ்ரீராம் தற்போது மருத்துவ சிகிச்சையில் உள்ளார். எனவே மருத்துவர் ஆலோசனையின் பேரில் சமூக ஊடகங்களில் இருந்து விலகி சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உடல்நலனில் கவனம் செலுத்தி மீண்டும் நலம்பெற அவரின் தனியுரிமைக்கு (Privacy) மதிப்பளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தவறான தகவல்களும், வதந்திகளும் எங்களை பாதிக்கிறது.
ஸ்ரீராமின் உடல்நிலை குறித்து தவறான தகவல்களையும் வதந்திகளையும் பரப்புவதை தவிர்க்குமாறு அனைத்து தரப்பு ஊடகத்தினரையும் கேட்டுக்கொள்கிறோம். அவரது உடல்நிலை தொடர்பான நேர்காணல்களையும், ஆட்சேபனைக்குரிய கருத்துகளையும் ஊடக தளங்களில் இருந்து நீக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தனிப்பட்ட ஒருவரின் நேர்காணல்கள் மூலம் முன்வைக்கும் கருத்துகளை நாங்கள் முழுமையாக மறுக்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.

— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) April 18, 2025