விருதுநகர் மேற்கு மாவட்டம் வத்திராயிருப்பு தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் பூத்கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நத்தம்பட்டி, சீல்நாயக்கன்பட்டி, குன்னூர், ரெங்கப்பநாயக்கன்பட்டி, கூமாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் கதாநாயகனாகவும் மக்களுக்கு நல்லவராகவும் இருக்கிறார். அதிமுகவை ஆட்சியில் அமர்த்துவதற்காகவும், எடப்பாடியை முதல்வராக்கவும் இந்த நேரத்தில் சபதம் ஏற்போம். நடக்கின்ற ஆட்சி மக்கள் விரோத ஆட்சி. திமுகவின் மக்கள் விரோத ஆட்சியை வீட்டிற்கு அனுப்பி எடப்பாடி பழனிசாமி என்ற மாமனிதரை கோட்டைக்கு அனுப்புவதற்கு அனைவரும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.
விலைவாசியை கட்டுப்படுத்தவும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், போதை இல்லாத கலாச்சாரத்தை உருவாக்குவதற்கும் அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும். திமுக ஆட்சியில் கிராமத்தில் உள்ள விவசாயிகள், நெசவாளர்கள் கஷ்டப்படும் நிலைமை உள்ளது. உழைக்கின்ற மக்கள் சாதாரணமாக ஒரு வீடு கட்ட முடியவில்லை. சிமெண்ட், செங்கல், கம்பி விலை விஷம் போல் ஏறிவிட்டது. திமுக ஆட்சியில் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில்லை. இதற்கெல்லாம் திமுகவின் நிர்வாக திறமையற்ற சூழல்தான் காரணம்.
திமுக கட்சி குடும்ப கட்சி ஆகிவிட்டது. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தனது குடும்பத்தையே பார்த்துக் கொள்ள நேரமில்லை. நாட்டைப் பற்றிய கவலையும் அவருக்கு இல்லை. அனைவரும் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றியடை செய்ய வேண்டும்" என தெரிவித்தார்.