சினிமா

சினிமா அப்டேட்: ஓடிடியில் வெளியானது 'கூலி' திரைப்படம்!

ரஜினிகாந்தின் 'கூலி' திரைப்படம் இன்று ஓடிடி தளத்தில் வெளியானது.

சினிமா அப்டேட்: ஓடிடியில் வெளியானது 'கூலி' திரைப்படம்!
Coolie released on OTT
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான 'கூலி' திரைப்படம், இன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.

'கூலி' திரைப்படம்

அனிருத் இசையமைத்த இப்படத்தில், நாகார்ஜுனா, அமீர்கான், சத்யராஜ், சவுபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

'கூலி' திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே உலகளவில் ரூ. 151 கோடி வசூலித்து, விஜய்யின் 'லியோ' படத்தின் முதல் நாள் வசூல் சாதனையை முறியடித்தது. மேலும், மூன்று நாட்களில் ரூ. 300 கோடி வசூலைக் குவித்து, தமிழ் படங்களில் மிக வேகமாக இந்த மைல்கல்லை எட்டிய திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றது. முன்னதாக, 'லியோ' திரைப்படம் ஐந்து நாட்களில் இந்தச் சாதனையை அடைந்திருந்தது.

இந்நிலையில், உலகளாவிய பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ரூ. 500 கோடி மைல்கல்லைத் தாண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், ரூ. 500 கோடி வசூல் கிளப்பில் நுழைந்த நான்காவது தமிழ் படமாகவும், ரஜினிகாந்தின் மூன்றாவது படமாகவும் 'கூலி' இணைந்துள்ளது.

'கூலி' திரைப்படம் தற்போது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் காணக் கிடைக்கிறது. படத்தை திரையரங்கில் பார்க்க முடியாத ரசிகர்கள் ஓடிடி ரிலீஸ் காரணமாக உற்சாகம் அடைந்துள்ளனர்.