ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கக் கோரித் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
‘யு/ஏ’ சான்றிதழ் வழங்க மனு தாக்கல்
கடந்த 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘கூலி’ திரைப்படம் ரூ. 450 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது. இந்த தணிக்கை வாரியம் இந்தப் படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியது. இதனால், 18 வயதுக்குக் குறைவான சிறாா்கள் இத்திரைப்படத்தைக் காணமுடியாத நிலை ஏற்பட்டது. மேலும், குடும்பத்துடன் படத்தைக் காண வரும் ரசிகர்களும் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து, ‘கூலி’ படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும் எனத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் எம்.ஜோதிபாசு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
வழக்கு விசாரணை
இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில், “’கூலி’ திரைப்படத்தைவிட ‘கேஜிஎஃப்’ உள்ளிட்ட திரைப்படங்களில் வன்முறைக் காட்சிகள் அதிகமாகவே உள்ளன. ஆனால், அந்தப் படங்களுக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. எனவே, ‘கூலி’ படத்துக்கு வழங்கப்பட்டுள்ள ‘ஏ’ சான்றிதழை ரத்து செய்து, ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கோரப்பட்டது.
இந்த வழக்கில் தணிக்கை வாரியம் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், “படத்தில் அளவுக்கு அதிகமான சண்டைக் காட்சிகள், மது அருந்தும் காட்சிகள் மற்றும் மோசமான வார்த்தைகள் உள்ளன. எனவே, குழந்தைகள் இப்படத்தைப் பார்ப்பதை அனுமதிக்க முடியாது. படத்திலுள்ள ஆட்சேபனைக்குரிய காட்சிகளை நீக்கிவிட்டு மீண்டும் ‘யு/ஏ’ சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம்” எனத் தெரிவித்தார்.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி, “குழந்தைகள் பார்ப்பதற்கு இந்தத் திரைப்படம் உகந்ததல்ல. எனவே, தயாரிப்பு நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்க முடியாது” எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார்.