சினிமா

பிரபல தொகுப்பாளினி பிரியங்காவின் 2-வது திருமணம்.. தாலி கட்டிய நபர் இவரா?

பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டேவை திருமணம் செய்த பிரபலம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல தொகுப்பாளினி பிரியங்காவின் 2-வது திருமணம்.. தாலி கட்டிய நபர் இவரா?
பிரபல தொகுப்பாளினி பிரியங்காவின் 2-வது திருமணம்.. தாலி கட்டிய பிரபலம் இவரா?
பிரபல தனியார் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளராக இருப்பவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் ’சூப்பர் சிங்கர்’, ‘ஸ்டார்ட் மியூசிக்’ உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். பிரியங்கா குறித்து பல சர்ச்சைகள் கிளம்பினாலும் அவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

விவாகரத்து

கடந்த 2016-ஆம் ஆண்டு பிரியங்கா தன்னுடைய காதலர் பிரவீனை திருமணம் செய்து கொண்டார். பின்னர் இவருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இருவரும் கடந்த 2022-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். தொகுப்பாளினி பிரியங்கா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது மட்டுமல்லாமல் பல ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டுள்ளார். ‘பிக்பாஸ்’, ‘குக் வித் கோமாளி’ போன்ற நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும் கலந்து கொண்டுள்ளார்.

மறுமணம்

இந்நிலையில், தொகுப்பாளினி பிரியங்கா, வசி என்பவரை மறுமணம் செய்துள்ளார். இதுதொடர்பான வீடியோ நேற்று சமூக வலைதளத்தில் வைரலானது. இந்த திருமணத்தில் பிரியங்காவின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. நரைத்த முடியுடன் வசி தாலி கட்ட பிரியங்கா எமோஷனலாகி கண்கலங்கும் வீடியோவை பார்த்த ரசிகர்கள் ‘இனி நீங்கள் நினைத்தது எல்லாம் நிறைவேறும்’ என்று கமெண்ட் செய்து வாழ்த்தி வருகின்றனர்.

பிரியங்காவின் கணவர் வசி பிரபல டிஜே (DJ) வாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது. சொந்தமாக ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தை நடத்தி வரும் இவர் தனது குழுவுடன் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பாடல் பாட சென்றபோது பிரியங்காவை சந்தித்து இருவரும் காதலில் விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.