உலகம்

காசா போருக்கு எதிர்ப்பு: இஸ்ரேலிய சுற்றுலா பயணிகளுக்கு தடை – மாலத்தீவு அரசு அதிரடி அறிவிப்பு

பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் அட்டூழியங்கள் மற்றும் இனப்படுகொலை செயல்களுக்கு பதிலளிக்கும் விதமாக அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாட்டை இந்த ஒப்புதல் பிரதிபலிக்கிறது என மாலத்தீவு அரசு அறிக்கை

காசா போருக்கு எதிர்ப்பு: இஸ்ரேலிய சுற்றுலா பயணிகளுக்கு தடை – மாலத்தீவு அரசு அதிரடி அறிவிப்பு
மாலத்தீவில் இஸ்ரேல் சுற்றுலா பயணிகளுக்கு தடை
இஸ்ரேல் சுற்றுலா பயணிகளுக்கு தடை

இஸ்ரேல் நாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைவதற்கு மாலத்தீவு அரசு தடை விதித்துள்ளது. காசா போரில் பாலஸ்தீனத்திற்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தும் வகை அந்நாட்டு அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது குறித்து அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ நாட்டின் குடியேற்றச் சட்டத்தில் திருத்தம் இன்றை செவ்வாய்கிழமை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய பின்னர் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புதிய சட்டத்திருத்த விதியின்படி, இஸ்ரேலிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மாலத்தீவுக்குள் நுழைவதை வெளிப்படையாக தடை செய்கிறது.
பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் அட்டூழியங்கள் மற்றும் இனப்படுகொலை செயல்களுக்கு பதிலளிக்கும் விதமாக அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாட்டை இந்த ஒப்புதல் பிரதிபலிக்கிறது” என கூறப்பட்டுள்ளது.

மாலத்தீவு அரசு அதிரடி

ஆனால் இனப்படுகொலை குற்றச்சாட்டை இஸ்ரேல் தொடர்ந்து நிராகரித்து வருகிறது. சர்வதேச சட்டத்தை மதித்து வருவதாகவும், போரை தூண்டி காசாவிலிருந்து எல்லை தாண்டிய ஹமாஸ் தாக்குதலுக்கு பிறகு, தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டிய உரிமை இஸ்ரேலுக்கு இருப்பதாகவும் கூறி வருகிறது.

மாலத்தீவு பொருளாதாரத்தின் முக்கிய பங்காக சுற்றுலாத்துறை உள்ளது. அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 21 சதவீதம் பங்களிக்கிறது. கடந்த 2024ம் ஆண்டில் 5.6 பில்லியன் டாலர்களை ஈட்டுகிறது என அரசு தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு மாலத்தீவு சுமார் 5 பில்லியன் டாலருக்கு மேல் வருவாயை எதிர்பார்க்கிறது.