கடந்த 2023-ஆம் ஆண்டு இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் ‘ஜெயிலர்’. இந்த படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகிபாபு, விநாயகன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
இப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘காவாலா’ பாடலுக்கு நடிகை தமன்னா நடனமாடியிருந்தார். இந்த பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. ’ஜெயிலர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி 600 கோடிக்கு மேல் வசூலை குவித்து சாதனை படைத்தது. இந்த பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் இயக்கி வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாக சமீபத்தில் படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது. ’ஜெயிலர் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாடு, கேரளா, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பல மாநிலங்களில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், முதல் பாகத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்களே இதிலும் பணிபுரிய உள்ளார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினி, கோவை வந்துள்ளார். இன்னும் இரண்டு வாரத்திற்கு ஆனைகட்டி மற்றும் கேரள மாநில எல்லையில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டு உள்ளது. இதன் இடையே ஆனைகட்டியில் படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை பார்த்த ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். அவரை சூழ்ந்து கொண்டு "தலைவா.. கடவுளே..." என்று கூச்சலிட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.