நடிகர் பார்த்திபனின் பதிவு
இந்த நிலையில், தனுஷுடன் இணைந்து 'இட்லி கடை' படத்தில் நடித்தது குறித்து நடிகர் பார்த்திபன் தனது எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில், "Mischievous பார்த்திபன்... Missssschivous Mr தனுஷிடமிருந்து எனக்குக் கிடைத்த பட்டம்! குறும்பு அரும்புவதே விரும்பும் போதும், அல்லது விரும்பப்படும் போதும்! இன்னமும் நான் ரசிகர்களால் விரும்பப்பட, படாதபாடு படுகிறேன். 'இட்லி கடை'யில் நானொரு மினி இட்லியாக சுவைக்கப்பட்டால் மகிழ்வேன். தனுஷுடன் பணியாற்றுவது இதுதான் முதல் அனுபவம். கிடைத்த மிகக் குறுகிய அவகாசத்தில் அவரை ஒரு முழுமையான கலைஞனாக முற்றிலும் ரசித்தேன். அது பற்றி 14-ம் தேதி நேருக்கு நேர் நேரும்!
குழிக்குழியான பாத்திரத்தில் நிரப்பப்படும் மாவே இட்லி. ஆர்.அறிவு என்ற கௌரவப் பாத்திரத்தில் இட்டு நிரப்பப்பட்டிருக்கிறேன் நான். இந்த ஆர். அறிவை ரசிகர்கள் தங்கள் பேரறிவைக் கொண்டு கமென்ட்டில் கொண்டாடுவது மகிழ்ச்சி. இட்லி கடையின் கதைக்கு இணையாக இங்கிலீஷில் சொல்வதானால்…. It tally with a tale of ‘Italy shop’ by Danish" என்று பதிவிட்டுள்ளார்.
‘Mischievous’ பார்த்திபன்
— Radhakrishnan Parthiban (@rparthiepan) September 10, 2025
Missssschivous Mr தனுஷிடமிருந்து ஒரு பட்டம்!
குறும்பு அரும்புவதே விரும்பும் போதும், or விரும்பப்படும் போதும்! இன்னமும் நான் ரசிகர்களால் விரும்பப்பட, படாத பாடு படுகிறேன்.’இட்லி கடை’யில் நானொரு மினி இட்லியாக சுவைக்கப்பட்டால் மகிழ்வேன்.Mr தனுஷுடன்… pic.twitter.com/KuVcc2eo53