சென்னை: தெலுங்கில் டாப் ஹீரோவான நாகர்ஜுனாவின் மகனாக சினிமாவில் அறிமுகமானவர் நாக சைதன்யா. 2009ம் ஆண்டு வெளியான ஜோஷ் என்ற படத்தில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்த நாக சைதன்யா, விண்ணைத் தாண்டி வருவாயா தெலுங்கு வெர்ஷனில் சிம்பு கேரக்டரில் நடித்திருந்தார். இதே படத்தில் அவருடன் சமந்தாவும் நடித்திருந்தார். அப்போது முதல் காதலிக்கத் தொடங்கிய இருவரும், 2017ம் ஆண்டு குடும்பத்தினர் சம்மத்ததுடன் திருமணம் செய்துகொண்டனர்.
டோலிவுட்டின் மிகப் பெரிய சினிமா குடும்பத்தின் மருமகளாக சமந்தா சென்றது கோலிவுட்டையே திரும்பிப் பார்க்க வைத்தது. பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்களின் காதல் திருமணம், அடுத்தடுத்து பல சர்ச்சைகளை சந்தித்தது. திருமணத்திற்குப் பின்னரும் சமந்தா தொடர்ந்து நடித்து வந்ததை, நாக சைதன்யாவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என சொல்லப்பட்டது. அதேநேரம் நாக சைதன்யாவுக்கும் பிரபல நடிகைக்கும் தொடர்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
ஒரு கட்டத்தில் தனித் தனியாக வாழ்ந்து வந்த நாக சைதன்யாவும் சமந்தாவும், 2021ல் முறைப்படி விவாகரத்துப் பெற்று பிரிந்தனர். அதன்பின்னர் சமந்தா கவர்ச்சியின் எல்லைக்கே செல்ல, பான் இந்தியா அளவில் பிரபலமானார். ஆனால், சமந்தா மயோசிடிஸ் பாதிப்பு காரணமாக ரொம்பவே அவஸ்தைப்பட்டு வந்தது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இதனிடையே நாக சைதன்யாவும் பாலிவுட் நடிகை சோபிதா துலிபலாவும் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
மேலும் படிக்க - ஃபஹத் பாசில் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..?
அதோடு இருவரும் அடிக்கடி டேட்டிங் சென்ற புகைப்படங்களும் வெளியாகி வைரலாகிக் கொண்டே இருந்தன. பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கேரக்டரில் நடித்து பிரபலமான சோபிதா, பாலிவுட்டிலும் கவர்ச்சியில் கலங்கடித்தார். முக்கியமாக நைட் மேனேஜர் என்ற இந்தி வெப் சீரிஸில், பிகினியில் நடித்து ஓடிடி ரசிகர்களை கிறங்கடித்தார். அதேபோல் லிப் லாக் காட்சிகளிலும் தாராளமாக நடித்து வந்தார். இப்போது இவரையே திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளாராம் நாக சைதன்யா.
அதன்படி இருவருக்கும் இன்று நாக சைதன்யா வீட்டில் நிச்சயதார்த்தம் நடைபெறுவதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், இந்தாண்டு இறுதியில் நாக சைதன்யா – சோபிதா துலிபலா இருவருக்கும் திருமணம் நடைபெறும் என சொல்லப்படுகிறது. தனது அப்பா நாகர்ஜுனா ஸ்டைலில் நாக சைதன்யாவும் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள உள்ளது டோலிவுட்டையே அதிர வைத்துள்ளது. சமந்தாவிடம் தனது காதலை தெரிவித்த அதேநாளில் சோபிதா துலிபலாவை நிச்சயம் செய்துகொள்கிறார் நாக சைதன்யா.
நாக சைதன்யாவுக்கும், சோபிதாவுக்கும் இன்று நிச்சயதார்த்தம்?#KumudamNews | #kumudamnews24x7 | #kumudam | #nagachaitanya | #Sobihta | @chay_akkineni | @sobhitaD pic.twitter.com/bxggrmpyIa
— KumudamNews (@kumudamNews24x7) August 8, 2024