சினிமா

கமல் வரிகளில் ‘தக் லைஃப்’ பாடல்.. படக்குழு வெளியிட்ட முக்கிய அப்டேட்

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகவுள்ள ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

கமல் வரிகளில் ‘தக் லைஃப்’ பாடல்.. படக்குழு வெளியிட்ட முக்கிய அப்டேட்
’தக் லைஃப்’ படத்தின் முக்கிய அப்டேட்
'பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தக் லைஃப்’. இந்த படத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, அபிராமி, நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வழங்குகிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ‘தக் லைஃப்’ திரைப்படம் வருகிற ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு செர்பியா, அயர்லாந்து, ராஜஸ்தான், டெல்லி, கோவா, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. பல ஆண்டுகளுக்கு பிறகு மணிரத்னம்-கமல் கூட்டணி இணைந்துள்ளதால் 'தக் லைஃப்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘தக் லைஃப்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘ஜிங்குச்சா..’(Jinguchaa) பாடல் நாளை (ஏப்.18) வெளியாகவுள்ளதாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும், இந்த பாடலை கமல்ஹாசன் எழுதியுள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.