சென்னை ஆலந்தூரில் மாநில அளவிலான சிலம்பாட்ட சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட குழந்தைகள், இளைஞர்கள் பங்கேற்று போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகளை பெற்றனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திரைப்பட நடிகர் அட்டகத்தி தினேஷ் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி கெளரவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, “தமிழ்நாடு அரசு விளையாட்டு துறை பல்வேறு முக்கிய முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. சென்னையில் விளையாடுவதற்கு தேவையான விளையாட்டு திடல்கள் குறைவாக இருக்கிறது. விளையாட்டுத் திடல்கள் பலவும் கார்ப்பரேட்டுகள் விளையாடுபவையாக மாறியிருக்கிறது. எனவே அனைவரும் பயன்படுத்தும் வகையில் விளையாட்டு திடல்கள் அதிகப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்
மேலும் விஜய் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு, அவரவர்களின் எண்ணத்தின்படி செயல்பாடுகள் இருக்கிறது. அது மக்களுக்கு எந்த அளவில் நல்லதாக இருக்கிறது என்பதை தான் பார்க்க வேண்டும். அது நல்லதாக மாறும் என்று நம்புகிறேன் என்று பதில் அளித்தார்
இளையராஜா காப்பிரைட் (Copy right) சர்ச்சை குறித்த கேள்விக்கு, இசை என்பது இசையமைப்பாளரின் எண்ணத்தில் உருவாவது. அவர் இழப்பீடு கேட்பது தார்மீகமாகவும், தர்மத்தின் படியும் சரியான ஒன்று. அதை அவர் கேட்காமலேயே அவருக்கு தர வேண்டும் என்று தெரிவித்தார்.
நடிகர்களுக்கு திரைப்படத்தின் பெயரில் அடைமொழி வருவது இயல்பு. எனக்கு அட்டகத்தி தினேஷ் என்பது மிகவும் பிடிக்கும், அதைவிட கெத்து தினேஷ் என்பதும் மிகவும் பிடிக்கும். ஆனால் என்னுடைய தாய்- தந்தை வைத்த தினேஷ் என்ற பெயர்தான் முதலில் பிடிக்கும் என்று தெரிவித்தார்.
நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு, அடுத்த நிகழ்ச்சிக்கு எப்படி செல்லுவது என்று தெரியாமல் இருக்கிறேன் எனக்கு அமைதியான வாழ்க்கை தேவை என்று பதில் அளித்தார்.