‘உருட்டு உருட்டு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிறார் மறைந்த நாகேஷின் பேரன், கஜேஷ் நாகேஷ். அவருக்கு ஜோடியாக ரித்விகா ஸ்ரேயா நடித்துள்ளார். விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவானது, படக்குழுவினர் மற்றும் திரைப் பிரபலங்களுடனும், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது.
நாயகன் கஜேஷ் நாகேஷ் பேசுகையில், "எங்கள் படக்குழுவினரை வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி. இந்தப் படம் கொஞ்சம் கஷ்டத்தில் தான் ஆரம்பித்தோம். தயாரிப்பாளர் ஜெய் அண்ணா இந்தப் படத்தை நன்றாகச் செய்வோம் என உழைத்துள்ளார். இசையமைப்பாளர், தினா மாஸ்டர், இயக்குநர் என அனைவரும் இந்த படத்தை அழகாக மாற்றியுள்ளனர். உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும். இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள்" என குறிப்பிட்டார்.
எங்க அப்பா செய்த புண்ணியம்: ஆனந்த் பாபு
நடிகர் ஆனந்த் பாபு பேசுகையில், "என் மகனின் படத்திற்கு வாழ்த்த வந்துள்ள திரையுலகப் பெரியவர்களான விக்ரமன் சார், கஸ்தூரிராஜா சார், ஆர்.வி. உதயகுமார் சார், அனைவருக்கும் நன்றி. இவர்களுடைய ஆசீர்வாதம் என் பிள்ளைக்குக் கிடைப்பது மகிழ்ச்சி. இது எங்க அப்பா செய்த புண்ணியம். நாகேஷ் ஐயாவுக்கான மரியாதையாக இது அமைந்துள்ளது. 'உருட்டு உருட்டு' படத்தை இயக்குநர் அழகாக உருவாக்கியுள்ளார். என்னுடைய பையன் நாயகனாக நடித்துள்ளான். நான் நடித்தபோது எனக்கு எப்படி ஆதரவு தந்தீர்களோ, அதேபோல் என் பையனுக்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள்" என்றார்.
ஆனந்த பாபுவுடைய சூழ்நிலை எனக்கு புரியும்:
இயக்குநர் கஸ்தூரிராஜா பேசுகையில், “ஆனந்த் பாபு எனக்கு நெருங்கிய நண்பர். நாகேஷ் சார், செல்வராகவன் இயக்கிய 'காதல் கொண்டேன்' படத்தில் நடித்திருக்கிறார். நாகேஷ் சாரைப் பற்றிப் பேசாமல் எந்த ஒரு சினிமா மீடியாவும் தப்பிக்க முடியாது. அவ்வளவு சாதனைகள் செய்துள்ளார். நாகேஷைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால், பாலசந்தர் பற்றியும் சொல்ல வேண்டும். இருவரும் செய்த சாதனைகள் அவ்வளவு இருக்கின்றன. அவர் பேரனை நான் ஆசீர்வதிக்க வேண்டும் என்பதற்காகத்தான் வந்தேன்.
ஆனந்த் பாபுவுடைய சூழ்நிலையை நான் கண் முன்னாடி பார்த்திருக்கிறேன். தனுஷை அறிமுகப்படுத்த தயாரிப்பாளர்களை நான் தேடிப் போகவில்லை. நானே தயாரிப்பாளராக இருந்தேன். நானே இயக்குநராகவும் இருந்தேன். ஆனால், ஆனந்த் பாபு தன் பையனுக்காக ஒவ்வொரு அலுவலகத்துக்கும் போனார். என்னுடைய அலுவலகத்துக்கும் வந்திருந்தார். என் பையன்களுடைய அலுவலகங்களுக்கும் போயிருக்கிறார். அந்த தந்தையினுடைய வலிக்கு நீங்கள்தான் நிவாரணம் கொடுக்க வேண்டும். அதற்காக இந்தப் படம் பெரிய வெற்றி பெற வேண்டும். 'உருட்டு உருட்டு' எனத் தலைப்பைக் கவர்ச்சியாக வைத்துள்ளார்கள். இந்தத் தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். எல்லா டெக்னீஷியன்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். எல்லாரும் ஜெயிக்கணும்” என படக்குழுவினரை வாழ்த்தினார்.
’உருட்டு உருட்டு’ திரைப்படத்திற்கு அருணகிரி இசையமைத்துள்ளார். யுவராஜ் பால்ராஜ் ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் பாஸ்கர் சதாசிவம்.