இயக்குநர் மு. மாறன் இயக்கத்தில், நடிகர் ஜி.வி. பிரகாஷ்குமார் நடித்துள்ள 'பிளாக்மெயில்' திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. ஜேடிஎஸ் ஃபிலிம் ஃபேக்டரி பேனரில் ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரித்துள்ள இந்தத் திரைப்படம், வரும் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இயக்குநர் மாறன் பேச்சு
நிகழ்வில் பேசிய படத்தின் இயக்குநர் மாறன், "தயாரிப்பாளர் எனக்கு அளித்த ஒத்துழைப்பு மகத்தானது. இவரைப் போல ஒரு தயாரிப்பாளர் கிடைப்பது அரிது. இந்தப் படம் வெற்றியடைந்து அவர் மேலும் பல படங்களைத் தயாரிக்க வேண்டும். சினிமா துறை இக்கட்டான சூழலில் இருக்கும்போது, தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான தனஞ்செயன் சார் எங்கள் படத்திற்கு கைக்கொடுத்து ஆதரவு கொடுத்தது பெரிய விஷயம். படக்குழுவினர் அனைவரின் ஒத்துழைப்பிற்கும் நன்றி. ஜி.வி. பிரகாஷ் சாருடன் அடுத்தடுத்த படங்களில் பணியாற்ற நானும் ஆவலுடன் உள்ளேன்” என்றார்.
நடிகர் ஜி.வி. பிரகாஷ் உரை
இதையடுத்து பேசிய நடிகர் ஜி.வி. பிரகாஷ், "படக்குழுவினர் அனைவரும் முழு அர்ப்பணிப்புடன் வேலை செய்துள்ளார்கள். இயக்குநர் மாறன் ஒரு நல்ல படத்தைக் கொடுத்துள்ளார். இந்தத் திரைப்படம் ஒரு த்ரில்லராக உங்களை இருக்கையில் கட்டிப்போடும். படம் தயாரிப்பாளருக்கு லாபகரமானதாக அமைய வேண்டும். எங்கள் படத்திற்கு ஆதரவு கொடுத்த தனஞ்செயன் சாருக்கும் நன்றி. இடைவேளைக்கு முன்பு வரும் 40 நிமிடங்கள் நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும். படம் பார்த்துவிட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்” என்றார்.
விநியோகஸ்தர் தனஞ்செயன் உரை
தொடர்ந்து பேசிய தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் தனஞ்செயன், "இந்தப் படம் பார்த்து முடித்ததும், ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி கிடைக்கும். எப்படி பிளாக்மெயில் செய்கிறார்கள், எப்படி கடத்துகிறார்கள் எனப் பல அடுக்குகளில் கதை நகரும். சினிமாவில் நல்ல படங்களை வேண்டுமென்றே தடுக்கும் பல எதிர்மறையான விஷயங்கள் நடந்து வருகின்றன. அதையெல்லாம் தாண்டித்தான் ஒரு படம் வெற்றி பெற வேண்டியதாக இருக்கிறது. அதனால், நல்ல சினிமாவுக்கு எப்போதும் ஆதரவு கொடுங்கள். இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷை அணுகுவது கடினம். ஆனால், நடிகராக அவரை அணுகுவது எளிது. தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம் ஜி.வி. பிரகாஷ்" என்று புகழாரம் சூட்டினார்.
தயாரிப்பாளர் அமல்ராஜ் பேசுகையில், “இந்தப் படத்தை ஜிவி பிரகாஷ் சரியான நேரத்தில் முடித்துக் கொடுத்தார். தேஜூ அஸ்வினி, ரமேஷ் திலக், வேட்டை முத்துக்குமார், பிந்து மாதவி என நடிகர்கள் அனைவரும் சரியான நேரத்தில் நல்லபடியாக படத்தை முடித்துக் கொடுத்தனர். உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை” என்றார்.

LIVE 24 X 7