நடிகர் தர்ஷன் தியாகராஜன், சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியில் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் அருகே காரை பார்க் செய்துவிட்டு டீ குடிக்க சென்றுள்ளார். அப்போது உயர் நீதிமன்ற நீதிபதியின் மகன் ஆதிச்சூடி மற்றும் அவரது மாமியார் உடன் நடிகர் தர்ஷன் மற்றும் அவரது நண்பர் லோகேஷூக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒருக்கட்டத்தில் நீதிபதியின் மகன்,மனைவியை, நடிகர் தர்ஷன் மற்றும் அவரது நண்பர்கள் தாக்கியதாக தெரிகிறது. தாக்குதலுக்கு உள்ளான இருவரும் அண்ணாநகர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் . மேலும், அவர்கள் ஜெஜெ நகர் காவல் நிலையத்தில் இச்சம்பவம் தொடர்பாக நடிகர் தர்ஷன் மற்றும் அவரது நண்பர்கள் மீது புகார் அளித்துள்ளனர்.
அதேபோல் நடிகர் தர்ஷன் தரப்பிலும் ஜெஜெ நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஜெஜெ நகர் போலீஸார், நடிகர் தர்ஷன் மற்றும் அவரது நண்பர்களிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து அவர்கள் மீது பெண் வன்கொடுமை உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து, நீதிபதி மகன் அதிச்சூடி, மனைவி லாவண்யா, மாமியார் மகேஷ்வரி மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை நடிகர் தர்ஷனின் நண்பர் லோகேஷை போலீஸார் கைது செய்த நிலையில் தற்போது தர்ஷனையும் போலீஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Breaking news
பார்க்கிங் விவகாரத்தில் நீதிபதி மகனுடனான மோதல்..நடிகர் தர்ஷன் கைது!
இன்று காலை நடிகர் தர்ஷனின் நண்பர் லோகேஷை போலீஸார் கைது செய்த நிலையில் தற்போது தர்ஷனையும் போலீஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.