ஆன்மிகம்

17 ஆண்டுகளுக்கு பின் காரைக்கால் அம்மையார் கோயில் கும்பாபிஷேகம்.. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு கோயில்களில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. உலக பிரசித்தி பெற்ற புதுச்சேரி காரைக்கால் அம்மையார் கோயில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

  17 ஆண்டுகளுக்கு பின் காரைக்கால் அம்மையார் கோயில் கும்பாபிஷேகம்.. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!
பல்வேறு கோயில்களில் குடமுழுக்கு விழா கோலாகலம்!
நெல்லை மாவட்டம் பாபநாசம் ஸ்ரீ உலகம்மை சமேத பாவநாசர் கோயில் கும்பாபிஷேகம் 20 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்றது. பொதிகை மலை அடிவாரத்தில் தாமிரபரணி நதியின் மேல்கரையில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாபநாசர் கோயிலில் திருப்பணிகள் நிறைவடைந்து, 6 கால யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

உலக பிரசித்தி பெற்ற புதுச்சேரி காரைக்கால் அம்மையார் கோயில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. காரைக்கால் அம்மையார் கோயிலில் 6 கால யாக சாலை பூஜையுடன் மகா பூர்ணாஹுதி செய்யப்பட்டு, யாக சாலையில் பூஜித்த புனித நீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் ஏந்தி கோயிலை வலம் வந்து வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே புதிதாக கட்டப்பட்ட முருகப்பெருமான் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அன்னூர் அருகே அ.மேட்டுப்பாளையத்தில் கட்டப்பட்டுள்ள வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் கோயில் பணிகள் முடிவு பெற்று, கும்பாபிஷேகம் நடைபெற்றது. யாகசாலையில் வைக்கப்பட்ட புனித நீர் மேளதாளத்துடன் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு விமான கலசங்களுக்கு ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் பெரிய காஞ்சிபுரம் ஸ்ரீ பொய்யாமுடி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. பெரிய காஞ்சிபுரம் பாண்டவதூத பெருமாள் கோயில் தெருவில், ஆண் வாரிசுக்கு அதிபதியாக விளங்கும் ஸ்ரீ பொய்யாமுடி விநாயகர் கோயிலில் 4 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மகா பூர்ணாஹுதி செய்து புனிதநீர் அடங்கிய கலசங்கள் புறப்பாடாகி, மேள தாளங்கள் முழங்க கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.