மகனை மீட்டு தரக்கோரி பெண் புகார்...ஆக்ஷனில் இறங்கிய சென்னை போலீஸ்
கணவன்-மனைவி இடையிலான தகராறு குறித்து முறையான விசாரணை நடத்துவதற்காக திருமங்கலம் காவல் நிலையத்தின் குறிப்பிட்டுள்ள மனுவை சென்னை பெருநகர காவல்துறையின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையருக்கு மாற்றப்பட்டுள்ளது.

மகனை மீட்டு தரக்கோரிய பெண்ணின் புகார் திருமங்கலம் காவல் நிலையத்திலிருந்து குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு துணை ஆணையருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மகனை மீட்டு தரக்கோரி புகார்
அண்ணா நகர் பகுதியில் வசித்து வரும் திவ்யா சசிதர் என்பவர் கடந்த 09ஆம் தேதி அன்று திருமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் அவரது கணவர் பிரசன்னா சங்கரநாராயணனின் அறிவுறுத்தலின்படி, கோகுல் கிருஷ்ணன் என்ற நபர் தனது 9 வயது மகனை அழைத்துச் சென்றதாகக் கூறினார். இருப்பினும், இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒப்புக்கொண்டபடி மகனை அவரிடம் திருப்பி அனுப்பவில்லை.
அப்புகாரின் பேரில் சிஎஸ்ஆர் மனு வழங்கி விசாரணை நடத்தி வரும்போது, திவ்யாவின் கணவர் பிரசன்னா சங்கரநாராயணன், தனது X (ட்விட்டர்) கணக்கில், திருமங்கலம் காவல் உதவி ஆணையர் மற்றும் திருமங்கலம் உதவி ஆய்வாளர் ஆகியோர் மீதும், தனக்கும் தனது மனைவிக்கும் இடையிலான பிரச்னை தொடர்பான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார்.
போலீஸ் நடவடிக்கை
இருவருக்கும் இடையேயான பிரச்னையை தீர்க்க பணம் கேட்டதாக கூற்றுக்களின் உண்மைத்தன்மையை விசாரணை செய்வதற்காக, அண்ணாநகர் காவல் துணை ஆணையர் நியமிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையில், கணவன்-மனைவி இடையிலான தகராறு குறித்து முறையான விசாரணை நடத்துவதற்காக திருமங்கலம் காவல் நிலையத்தின் குறிப்பிட்டுள்ள மனுவை சென்னை பெருநகர காவல்துறையின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையருக்கு மாற்றப்பட்டுள்ளது.
What's Your Reaction?






