TVK Vijay: “வெற்றிக் கழக கொடியேறுது... நம்ம சனத்தின் விதி மாறுது..” தவெக கொடிப் பாடல் லிரிக்ஸ்!

பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் தனது கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார் தலைவர் விஜய். இதனைத் தொடர்ந்து தவெக கொடிப் பாடலையும் விஜய் வெளியிட்டார். இப்பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் குறித்து தற்போது பார்க்கலாம்.

Aug 22, 2024 - 11:02
Aug 22, 2024 - 11:03
 0
TVK Vijay: “வெற்றிக் கழக கொடியேறுது... நம்ம சனத்தின் விதி மாறுது..” தவெக கொடிப் பாடல் லிரிக்ஸ்!
தவெக கொடிப் பாடல்

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவான விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள விஜய், அடுத்தடுத்து தனது கட்சியின் வளர்ச்சிப் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அதன் ஒருகட்டமாக இன்று தவெக கொடியை அறிமுகம் செய்துள்ளார் விஜய். சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், விஜய்யின் அம்மா, அப்பா ஆகியோருடன் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முதல் கழகத்தின் உறுதிமொழியை வாசித்த விஜய், அதன் பின்னர் கொடியை அறிமுகம் செய்தார். 

அதனைத் தொடர்ந்து கழகப் பாடலையும் வெளியிட்டார் விஜய். இந்தப் பாடலை கவிஞர் விவேக் எழுதியுள்ளதாகவும், தமன் இசையமைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், இதுகுறித்து தவெக சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அதேநேரம் தவெக கழக கொடிப் பாடல் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. வீடியோவாக வெளியாகியுள்ள இப்பாடலில் விஜய்யின் உருவம் கிராபிக்ஸ் வடிவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, பாடலின் முழுமையான வரிகளை இங்கே பார்க்கலாம். 

வெற்றிக் கழக கொடியேறுது... நம்ம சனத்தின் விதி மாறுது
வெற்றிக் கழக கொடியேறுது... மக்கள் ஆசை நிஜமாகுது
வெற்றிக் கழக கொடியேறுது... நம்ம சனத்தின் விதி மாறுது
வெற்றிக் கழக கொடியேறுது... மக்கள் ஆசை நிஜமாகுது

தமிழன் கொடி பறக்குது தலைவன் யுகம் பொறக்குது
மூணெழுத்து மந்திரத்த மீண்டும் காலம் ஒலிக்குது
தமிழன் கொடி பறக்குது தலைவன் யுகம் பொறக்குது
மூணெழுத்து மந்திரத்த மீண்டும் காலம் ஒலிக்குது

சிறுசும் பெருசும் ரசிக்குது சிங்கப் பெண்கள் சிரிக்குது
மக்களோட தொப்புள்கொடியில் மொளச்ச கொடியும் பறக்குது
மனசில் மக்கள வைக்கும் தலைவன் வரும் நேரமிது
மக்களுன் அவன மனசில் வச்சு ஆடிப்பாடி கூப்புடுது
சிகரம் கெடச்ச பின்னும் எறங்கி வந்து சேவ செஞ்சு
நீங்க குடுத்த எல்லாத்துக்கும் நன்றி காட்டும் காலமிது

தமிழா தமிழா நாம வாழப் போறோமே 
ஒரு கறை இல்லாத கையப் புடிச்சு போகப்போறோமே   
தமிழா தமிழா நாம வாழப் போறோமே 
ஒரு கறை இல்லாத கையப் புடிச்சு போகப்போறோமே   
 
தமிழன் கொடி 
தலைவன் கொடி
தருமக் கொடி
தரையின் கொடி
வீரக் கொடி
விஜயக் கொடி
ஆதிக்குடிய காக்கும் கொடி
தமிழன் கொடி
தலைவன் கொடி
தருமக் கொடி
தரையின் கொடி
வீரக் கொடி
விஜயக் கொடி
ஆதிக்குடிய காக்கும் கொடி

ரத்த செவப்பில் நிறமெடுத்தோம் 
ரெட்ட யானை பலம் கொடுத்தோம்
நரம்பில் ஓடும் தமிழுணர்வ 
உருவிக் கொடியின் உருக் கொடுத்தோம்
மஞ்சள் எடுத்து அலங்கரிச்சோம்
பச்ச நீல திலகம் வச்சோம்
பரிதவிக்கும் மக்கள் பக்கம் 
சிங்கம் வர்றத பறையடிச்சோம் 
தூரம் நின்னு பாக்கும் தலைவன் 
காலமெல்லாம் மாறுது
தோளில் வந்து கையப் போடும் 
தலைவன் கொடி ஏறுது
அரசர கேள்வி கேட்கும்
தளபதியின் காலமடி
அன்னைக்கே சொன்னோமே 
இது ஆளப்போற தமிழன் கொடி

 தமிழன் கொடி
தலைவன் கொடி
தருமக் கொடி
தரையின் கொடி
வீரக் கொடி
விஜயக் கொடி
ஆதிக்குடிய காக்கும் கொடி

தமிழன் கொடி
தலைவன் கொடி
தருமக் கொடி
தரையின் கொடி
வீரக் கொடி
வெற்றி வாகை சூடப்போற 
விஜயக் கொடி மக்கள் கொடி

மேலும் படிக்க - அப்பா, அம்மா முன்னிலையில் தவெக கொடியை அறிமுகம் செய்த விஜய்

இந்தப் பாடலில் “சிருசும் பெருசும் ரசிக்குது சிங்கப் பெண்கள் சிரிக்குது” என்ற வரியில், எழுத்துப் பிழை இருப்பதை பலரும் சுட்டிக் காட்டி வருகின்றனர். அதாவது ‘சிருசு’ அல்ல ‘சிறுசு’ என்பதை குறிப்பிட்டுள்ளனர். அதேபோல், “மூணெழுத்து மந்திரத்த மீண்டும் காலம் ஒலிக்குது” என்ற வரி, பேரறிஞர் ‘அண்ணா’ அல்லது ‘எம்ஜிஆர்’ இருவரையும் குறிப்பிட்டு, அந்த வரிசையில் விஜய் என்பதாக பொருள்படுகிறது. கொடியையும் கழகத்தின் பாடலையும் அறிமுகம் செய்துவிட்ட விஜய், விரைவில் முதல் மாநாடு குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், இந்நிகழ்வில் விஜய் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றுவார் என்று எதிர்பார்த்த நிலையில், அவர் மொத்தமே மூன்று நிமிடங்களில் தனது உரையை முடித்துவிட்டு புறப்பட்டுச் சென்றார். முக்கியமாக தவெக கொடி அமைப்பிற்கான அர்த்தத்தை கூட தெரிவிக்காமல் விஜய் கிளம்பிச் சென்றது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow