ஊட்டி மலை ரயில் சேவை ரத்து.. எப்போது வரை தெரியுமா..?
கனமழை காரணமாக தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் உதகை - குன்னூர் இடையேயான மலை ரயில் சேவை ரத்து.
கனமழை காரணமாக தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் உதகை - குன்னூர் இடையேயான மலை ரயில் சேவை ரத்து.
சாலை சீரமைப்பு பணிகள் விரைவுப்படுத்தி சீரமைக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு.
சென்னை வளசரவாக்கத்தில் ரக்ஷிதா என்பவர் வீட்டில் கொத்தடிமைகளாக பணியாற்றிய 5 பேர் மீட்கப்பட்டனர். மேலும் அவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சாதி, மத உணர்வுகளுக்கு அப்பால் தெலுங்கு மக்கள் வாழ்ந்து வருகிறோம். நடிகை கஸ்தூரிக்கு எதிராக நவம்பர் 10ஆம் தேதி மாநிலம் தழுவிய உண்ணாவிரதம் அல்லது மாபெரும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
17 வயது சிறுமி மூன்று வருடங்கள் பணிபுரிய 3 லட்சம் முன்பணம் கொடுத்ததாகவும், சந்தியா என்ற பெண் நான்கு வருடம் பணிபுரிய 4 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும் ரஷிதா தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு மீதான வாதங்களுக்காக, அவதூறு வழக்கு விசாரணையை டிசம்பர் 2ம் தேதிக்கு தள்ளிவைப்பு
தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 30 பேர் தரமணி காவல் நிலையத்தில் சென்று முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்தனர்.
சென்னை வடபழனி அருகே வீட்டில் மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இதனால் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமாகின. சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சென்னை வேளச்சேரியில் ஜவுளிக்கடை உரிமையாளரை கார் ஏற்றி கொல்ல முயன்றவரை போலீசார் கைது செய்தனர். தொழில் போட்டி காரணாமாக கொல்ல சதி செய்ததாக கைதான சிவகுமார் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
பாளையங்கோட்டையில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவரை வீடு புகுந்து அரிவாளால் தாக்கிய கும்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
சிவகங்கை அதிமுக கிளை செயலாளர் கணேசன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நாட்டாகுடி கிராமத்தை சேர்ந்த குண்டுமணியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை அதிமுக கிளை செயலாளர் கணேசன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து கொளையாளிகளை கைது செய்யக்கோரி சிவகங்கை எம்.எல்.ஏ. செந்தில்நாதன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியில் உள்ள தெருக்களில் கடந்த 2 மாதங்களாக கழிவுநீர் தேங்கி இருப்பதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காப்பாற்று.. காப்பாற்று.. என்ற முழக்கத்தோடு மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
தீபாவளி பண்டிகை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பும் மக்களால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. நேற்று மதியம் தொடங்கிய போக்குவரத்து நெரிசல் இன்னும் சீராகாமல் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
சென்னை திருவொற்றியூரில் தனியார் பள்ளியில் வாயுக் கசிவு ஏற்பட்டு மாணவிகள் மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து பள்ளியில் பெற்றோர் வாக்குவாதம் செய்ததை அடுத்து பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை சோழவந்தான் பகுதியில் தீபாவளி பண்டிகைக்கு முதல் நாள் முத்தையா என்பவருக்கும் மதன்குமார் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் ஆத்திரமடைந்த முத்தையா மகன் விக்னேஸ்வரன் மதன்குமாரின் வீட்டில் பெட்ரோல் குண்டை வீசியுள்ளார். இதையடுத்து மதன்குமார் அளித்த புகாரின்பேரில் விக்னேஸ்வரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை மெரீனா கடற்கரையில் காவலரிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட சந்திரமோகன், தனலட்சுமி ஆகியோரின் ஜாமின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கவரப்பேட்டை ரயில் விபத்து விவகாரத்தில் தீ விபத்து நடந்தது எப்படி என புதிய கோணத்தில் ரயில்வே போலீஸ் விசாரணையை துவக்கியுள்ளனர். விபத்து ஏற்பட்ட ரயிலில் தனியாக எரிபொருள்கொண்டு செல்லப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.
கோவை மாவட்டம் வெள்ளிப்பாளையம் பவானி ஆற்றில் உள்ள நீர்மின் உற்பத்தி கதவணை மதகுகளில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதனால் மதகுகள் திறக்க முடியாததால் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது.
சிவகங்கை மாவட்டம், நாட்டாக்குடி அருகே அதிமுக கிளை செயலாளர் கணேசன் வெட்டிக்கொலை
கிளாம்பாக்கம், தாம்பரம் பஸ் நிலையங்களில் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
சென்னை, வேலூர், ராணிப்பேட்டைஉள்பட 17 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை கனமழை பெய்யும்
நேற்று முன்தினம் இரவு நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், பர்லியாறு, கோவை மாவட்டம் கல்லாறு, மேட்டுப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது