மகாவிஷ்ணுவிடம் போலீசார் விசாரணை?
அரசுப்பள்ளிகளில் ஆன்மிக சொற்பொழிவு நடத்தி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த மகாவிஷ்ணுவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசுப்பள்ளிகளில் ஆன்மிக சொற்பொழிவு நடத்தி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த மகாவிஷ்ணுவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து ஆஸ்திரேலியாவில் இருந்து வீடியோ வெளியிட்ட மகா விஷ்ணு, ''நான் பேசியதில் என்ன தவறு உள்ளது? நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. நாளையே சென்னை வந்து இது குறித்து போலீசிடம் விளக்கம் அளிக்க உள்ளேன்'' என்று விளக்கம் அளித்தார்.
Bomb Threat To Dr. MGR Janaki College in Chennai : சென்னையில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கலை, அறிவியல் கல்லூரிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் இந்த மிரட்டலானது புரளி என தெரிய வந்தது.
பரந்தூர் விமான நிலையம் திட்டத்திற்கான பெருந்திட்ட அறிக்கை மற்றும், திட்டத்தின் வரைபடம் தயாரிக்க ஆலோகர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஒப்பந்தப்புள்ளியை தமிழக அரசு அறிவித்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சென்னை முழுவதும் 16, 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் 1,519 விநாயகர் சிலைகள் வைக்க காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
மதுரை புத்தகக் கண்காட்சியில் பள்ளி மாணவிகள் சாமி ஆடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதேபோல் இன்னொரு சம்பவமும் கடும் சர்ச்சையாகி உள்ளது.
School Students dance in Marudai BookFair: மதுரை புத்தக்கண்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட கருப்பசாமி பாடலை கேட்டு மாணவிகள் எழுந்து நின்று சாமியாடியதால் பரபரப்பு.
பள்ளிக்கல்வித்துறை சரியான திசையில் செல்லவில்லை என்று முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
''பள்ளிக்கல்வித்துறை அனுமதி கொடுக்காமல் நிகழ்ச்சி நடந்ததா? பள்ளிக்கல்வித்துறை, தலைமை ஆசிரியரை பலி ஆடாக ஆக்குவதற்கு பதிலாக அமைச்சர் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். ஆசிரியர்களுக்கு பாத பூஜை செய்வது பகுத்தறிவுக்கு எதிரானது அல்ல'' என்று தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்கள். மாணவர்கள் மத்தியில் என்ன பேச வேண்டும் என்று சொல்லியதற்கு மாறாக உளறித் தள்ளியதே சர்ச்சைக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
சென்னை கோயம்பேடு பூச்சந்தையில், வியாபாரிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் படத்துக்காக, சூர்யா நடித்துள்ள கங்குவா அக்டோபர் 10ம் தேதி ரிலீஸில் இருந்து பின்வாங்கியது. இந்நிலையில், கங்குவா படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீலாங்கரை நிலமோசடி வழக்கு தொடர்பாக சென்னையில் 5 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அண்ணாநகரில் காவல் ஆய்வாளர் ஆனந்தபாபு வீடு மற்றும் சாஸ்திரி நகர், பெசன்ட் நகர், சோழிங்கநல்லூர், வேளச்சேரியிலும் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.
சென்னையில் சைதாப்பேட்டை மற்றும் அசோக் நகர் அரசுப் பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு நடத்தப்பட்ட விவகாரத்தில் 2 அரசுப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் விளக்கம் அளிக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்
கல்வியே சமத்துவ மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம் எனும் நிகழ்ச்சி சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. இதில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
சென்னையில் அரசுப்பள்ளிகளில் ஆன்மிக சொற்பொழிவு நடத்தப்பட்ட விவகாரத்தில் சொற்பொழிவு ஆற்றிய மகாவிஷ்ணு, ஆசிரியரை தரக்குறைவாக பேசியது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்
தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதிமுக மற்றும் பாஜக இடையே மீண்டும் இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி அடைவேன் என பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜி சிலை விழுந்து நொறுங்கிய விவகாரத்தில் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் 2 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி. பரிசோதனையில் டெங்கு உறுதியான நிலையில் இருவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
சாட்டை துரைமுருகனுக்கு முன்ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக காவல் ஆணையர் அருண் தகவல் அளித்துள்ளார்
புதிய கல்விக் கொள்கைக்கு மாற்று கிடையாது, அதனை அனைவரும் ஏற்க வேண்டும் - சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆசிரியர்களுடனான கலந்துரையாடலில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
சிறையில் முதல் முறை குற்றவாளிகளை தனியாக வைப்பதற்கு திட்டங்கள் ஏதும் உள்ளதா? என தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது