100 ஏக்கர் ஒரே நாளில் நாசம்.. வேதனையில் குமுறும் விவசாயிகள்
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கனமழையால் நெல் நாற்று நட தயாராக இருந்த 100 ஏக்கர் விலை நிலங்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனைக்குள்ளாகினர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கனமழையால் நெல் நாற்று நட தயாராக இருந்த 100 ஏக்கர் விலை நிலங்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனைக்குள்ளாகினர்.
தமிழ்நாட்டில் இன்று விழுப்புரம், கடலூர், அரியலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாடு முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு, நிவாரண நடவடிக்கையை எடுக்காமல் சென்னையில் ஆலோசனை கூட்டம் நடத்துவதா என இபிஎஸ் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளாத ஸ்டாலினின் திமுக அரசுக்கு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கட்டுப்பாட்டு அறை ஊழியர்கள் வீட்டிற்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளோம் என்று தலைமைச் செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 16, 17ம் தேதிகளில் சென்னையில் கனமழை பெய்தாலும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்யக்கோரி தொடர்ந்த வழக்கை உடனடியாக விசாரிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழிற்சங்கத்தினர் முறையீடு செய்தனர். இந்த வழக்கை வரும் 16ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை நாளை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று சிகிச்சை அளிக்க மருத்துவ குழுக்கள் தயாராக இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது
கனமழை எதிரொலியாக நான்கு மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை எதிரொலியாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 15 சென்டிமீட்டர் அளவில் மழை பெய்யும் பட்சத்தில் மழை நீர் தானாகவே வெளியேறிவிடும் என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக பொன்னேரி ஸ்டேஷன் மாஸ்டர் உள்ளிட்ட 4 பேரிடம் சென்ட்ரல் ரயில்வே போலீஸ் டிஎஸ்பி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
புதுக்கோட்டை ஹோட்டலில் சவர்மா சாப்பிட்ட 7 வயது சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னைக்கு வரும் 16ம் தேதி அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லையில் இருந்து தமிழ்நாடு பேரிடர் மீட்புப்படை சென்னை விரைகிறது.
மழைக்கால மீட்பு பணிகளுக்காக தீயணைப்புத் துறை அனைத்து வீரர்களும் பணிக்கு திரும்ப வேண்டும் என தீயணைப்புத்துறை டிஜிபி ஆபாஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
வரக்கூடிய அக்டோபர், டிசம்பர் மாதங்களுடன் ஒப்பிடுகையில், நவம்பரில் அதீத கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார். குமுதம் சேனலுக்காக தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்துள்ள பிரத்யேக பேட்டியை தற்போது பார்க்கலாம்.
வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், சென்னையின் திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம் உள்ளிட்ட 15 மண்டலங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
2026 தேர்தலின்போது திமுக கூட்டனி ஆட்சியில் பங்கு கொடுக்கவில்லை என்றால் திமுக கூட்டணி வெளு வெளுத்து போகும் என முன்னாள் ஆளுநர் தமிழசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள், வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம், ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு கடந்த வாரம் 10ம் தேதி வெளியானது. முதல் நான்கு நாட்களில் வேட்டையன் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னைக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையில் 18 குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் மிதக்கிறது மதுரை மற்றும் கோவை. அடுத்த சில நாட்களில் சென்னை மாநகரம் என்ன ஆகுமோ? இதுதான் பருவமழையை எதிர்கொள்ளும் அழகா? என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இன்று அதிகாலை 5.30 மணியளவில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாகவும் இது வட தமிழ்நாடு, புதுச்சேரியையொட்டி தெற்கு பகுதியில் நகரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் இன்று ஆலோசனை
மும்பையில் இருந்து நியூயார்க்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. இதன்காரணமாக அவசரமாக விமானம் டெல்லிக்கு திருப்பப்பட்டது. இதையடுத்து உடனடியாக பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு விமானத்தில் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனையில் ஈடுபட்டனர்.