K U M U D A M   N E W S

புழல் சிறை வளாகத்திற்குள் தடை செய்யப்பட்ட பொருட்கள் குறித்து விசாரணை நடத்த குழு அமைப்பு...!

தடை செய்யப்பட்ட செலஃபோன் , கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் புழல் சிறை வளாகத்திற்குள் கண்டறியப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த உளவுப்பிரிவு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Kasthuri Raja : தனுஷின் தந்தை தாக்கல் செய்த மனு.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Kasthuri Raja : பொய் வழக்கு தொடர்ந்ததாக கூறி தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் என நடிகர் தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா தாக்கல் செய்த மனு

மோசடி வழக்கில் பதிலளிக்க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நீதிமன்றம் உத்தரவு..!

வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக பதியப்பட்ட வழக்கில் மேல் விசாரணை நடத்தக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காதலனை கொன்ற காதலி... சற்றும் எதிர்பாராத தீர்ப்பு

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் காதலனை விஷம் வைத்துக் கொன்ற வழக்கு.

காதலனை விஷம் வைத்து கொன்ற காதலி.. கிரீஸ்மாவிற்கு தூக்கு தண்டனை விதிப்பு

காதலன் ஷரோனை குளிர்பானத்தில் விஷம் வைத்து கொன்ற காதலி கிரீஸ்மாவிற்கு தூக்குதண்டனை விதித்து நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டவிரோத மணல் கொள்ளை – மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்கள், கொசஸ்தலை ஆற்றுப் படுகைகளில் சட்டவிரோதமாக மணல், சவுடு மண் அள்ளுவதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்,  அரசுத்துறை அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

UNION BUDGET: பிப்.1-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 31ம் தேதி தொடங்குகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

துணைவேந்தர்கள் நியமனம் - உச்சநீதிமன்றம் அதிரடி

"பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன விவகாரத்தில் தீர்வு எட்டப்படவில்லை என்றால் நீதிமன்றம் தீர்வு காணும்"

சிறைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்கள் - அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபி-க்கு உத்தரவு..!

செல்ஃபோன், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் சிறை வளாகத்திற்கு எப்படி  கொண்டு செல்லப்படுகிறது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிறைத்துறை டிஜிபி-க்கு  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழிப்பறி வழக்கு - காவல்துறைக்கு பறந்த உத்தரவு

ரூ.20 லட்சம் வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க உத்தரவு

Savukku Shankar Case: சவுக்கு சங்கர் வழக்கு – அதிரடி உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்

நில அபகரிப்பு வழக்கில் யூடியூப்பர் சவுக்கு சங்கருக்கு ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

20 லட்சம் ரூபாய் பறித்த வழக்கு.. ஜாமின் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, காவல்துறைக்கு  உத்தரவு..!

20 லட்சம் ரூபாய் பறித்த வழக்கில்  கைது செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜாசிங் மற்றும் வருமான வரித்துறை அலுவலர் தாமோதரன் ஜாமின் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, காவல்துறைக்கு  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பழ. நெடுமாறன் வெளிநாடு சென்றால் நாட்டின் பாதுகாப்பு எப்படி பாதிக்கும்..? நீதிபதி கேள்வி

பாஸ்போர்ட்-டை புதுப்பிக்கக் கோரி, உலகத் தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன் அளித்த விண்ணப்பத்தை பாஸ்போர்ட் அலுவலகம் நிராகரித்த நிலையில் மூன்று வாரங்களில் விண்ணப்பத்தின் மீது முடிவெடுக்க பாஸ்போர்ட் அதிகாரிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கில் மூளையாக செயல்பட்ட  காவல் உதவி ஆய்வாளர் கைது.. நீதிமன்றம் உத்தரவு

காரில் கடத்தி சென்று 20 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்த வழக்கில் மூளையாக செயல்பட்ட சைதாப்பேட்டை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சன்னி லாய்டுவை வரும் 30-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் சயிஃப் அலிகான் மீது வீடுபுகுந்து தாக்குதல்

கத்திக்குத்து - மருத்துவமனையில் அறுவை சிகிச்சை.

திமுக ஆட்சியில் மேலும் பல "சார்கள்" - EPS தாக்கு

"சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள் ஒருவர் புகுந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவத்தால் அதிர்ச்சி"

பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. திமுக ஆட்சியில் பல ‘சார்’கள் உருவாகிக்  கொண்டிருப்பதாக பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண் நோயாளி ஒருவருக்கு இளைஞர் பாலியல் தொல்லை கொடுத்த நிலையில் திமுக ஆட்சியில் பல ‘சார்’கள் உருவாகிக்  கொண்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. கையும் களவுமாக பிடிபட்ட போதை ஆசாமி

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண்கள் வார்டில் புகுந்து 50 வயது பெண் நோயாளியிடம் போதை ஆசாமி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சிந்தாதிரிப்பேட்டையில் நவீன மீன் அங்காடி வேண்டாம்... உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்...!

கூவம் நதியில் மீன் கழிவுகள் கொட்டப்பட   வாய்ப்புள்ளதால், முறையான திடக்கழிவு மேலாண்மை வசதியை ஏற்படுத்தாமல், சிந்தாதிரிப்பேட்டையில் அமைக்கப்படும் நவீன மீன் அங்காடியை துவங்க கூடாது என உத்தரவிடக்கோரி சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் பெண்கள் வார்டில் புகுந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை

கடத்தலில் 20 லட்சம் ரூபாய் பறித்த வழக்கு.. காவல், ஐ.டி அதிகாரிகளின் ஜாமின் மனு தள்ளுபடி..!

தனியார் நிறுவன ஊழியரை காரில் கடத்தி 20 லட்சம் ரூபாய் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர், வருமான வரித்துறை அதிகாரிகளின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் மீது ஒழுங்கு நடவடிக்கை.. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

கும்பகோணம் கோவில் குளங்களில், கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த ஒத்துழைக்காத கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

படைத் தலைவன் திரைப்படம்.. ஜனவரி 24ம் தேதிக்கு முன்னதாக வெளியாகாது... தயாரிப்பு நிறுவனம் உறுதி..!

மறைந்த விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள படைத் தலைவன் திரைப்படம் ஜனவரி 24ம் தேதிக்கு முன்னதாக வெளியிடப்பட மாட்டாது என தயாரிப்பு நிறுவனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி தெரிவிக்கப்பட்டது. 

யானை வழித்தடத்தில் மண் எடுத்த விவகாரம்.. சிறப்பு புலனாய்வு குழுவை நியமனம்..!

கோவையில் யானை வழித்தடத்தில்  மண் எடுத்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு குழுக்கு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மாவட்ட ஆட்சியர் தலைமையில் தான் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் - அரசுத் தரப்பு