தவெக அரசியல் ஆதாயத்திற்காக தொடங்கப்பட்ட கட்சி அல்ல- விஜய் ஆவேசம்
தமிழக வெற்றிக் கழகம் அரசியல் ஆதாயத்திற்காக தொடங்கப்பட்ட கட்சி அல்ல என்றும் சமரசம் என்ற பேச்சுக்கு இடமில்லை என்று அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் அரசியல் ஆதாயத்திற்காக தொடங்கப்பட்ட கட்சி அல்ல என்றும் சமரசம் என்ற பேச்சுக்கு இடமில்லை என்று அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக்கழகம் சார்பில் கோவையில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கில் விஜய் கலந்துகொண்ட நிலையில், அவரை காண ரசிகர்கள் திரண்ட நிலையில், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், திமுக கொடியை சேதப்படுத்தியதாகவும், 2 திமுக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்து பீளமேடு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மனதில் நேர்மையும் கரை படியாத அரசியல் செய்ய வேண்டும் என்ற நோக்கமும் உள்ளது என விஜய் பேச்சு
தவெகவின் கொள்கைத்தலைவர்கள் படங்களுக்கு விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினார்
விஜய், திறந்த வாகனத்தில் ஒரு மணி நேர ரோட் ஷோவாக சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட மாநாட்டுத் திடலை நோக்கி பயணித்தார்.
தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பூத் கமிட்டி மாநாடு இன்று கோவையில் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெறுகிறது. சென்னையிலிருந்து தனிவிமானம் மூலம் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் கோவைக்கு சென்றுள்ளார். கோவை விமான நிலையத்தில் இருந்து அவர்களுக்கு Y- பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பூத் கமிட்டி மாநாடு இன்று ( ஏப்ரல் 26 ) கோவையில் நடைபெற உள்ளது. இந்த பூத் கமிட்டி மாநாட்டில் தவெக தலைவர் விஜய் பங்கேற்க உள்ளதாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்திருந்த நிலையில், கூட்டத்தில் விஜய் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஒரு நாளுக்கு 8,000 வீதம் கலந்து கொள்ள உள்ளனர்.
மாவட்ட வாரிய பொறுப்பாளர்களை நியமித்து வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை