28 ஆண்டுகள் தாமதம்: பட்டா வழங்கக் கோரி காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தை ஆதிதிராவிட மக்கள் முற்றுகை!
1996ஆம் ஆண்டு அரசு கையகப்படுத்திய நிலத்துக்கு 28 ஆண்டுகளாகப் பட்டா வழங்காமல் காலம் தாழ்த்தியதைக் கண்டித்து, காஞ்சிபுரம், வல்லபாக்கம் பகுதியைச் சேர்ந்த ஆதிதிராவிடப் பொதுமக்கள் இன்று வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.